மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர் கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: டெல்லியில் தமிழக விவசாயிகள் 32வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை 5 முறை நான் சந்தித்தேன். தமிழக விவசாயிகள் நலனு க்கான முயற்சியில் நான் ஈடுபடுவேன் என்று கூறினேன். போராட்டம் நடத்தும் விவசா யிகள் தலைவர் அய்யாக் கண்ணுவை 2 முறை மத்திய விவசாயத் துறை அமைச்சர், 3 முறை நிதி அமைச்சர் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர். மேலும், உமாபாரதி, ஜனாதிபதியையும் சந்தித்துள்ளார். விவசாயிகள் ஏன் போராட்டத்தை டெல்லியில் நடத்துகின்றனர் என்பதே சந்தே கமாக உள்ளது. பிரதமர் அலுவலகத்தில் மனு கொடுத்து விட்டுவரும் வழியில் திடீரென ஒருவிவசாயி நிர்வாணமாக மாறி உள்ளார். அதை தொடர்ந்து வேறு சில விவசாயிகளும் நிர்வாணமாகமாறினர். முதலில் நிர்வாணமாகியது தமிழகத்தை சேர்ந்த விவசாயியே அல்ல. அவர் கர்நாடகத்தை சேர்ந்தவர்.
அடுத்த நாள் பெண்களை நிர்வாணப்படுத்தி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதற்குபோராட்ட குழுவிற்கு உதவிய சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் அதை கைவிட்டு விட்டனர். பின்னர் கழுத்தறுப்பு போராட்டம் நடத்த திட்டுமிட்டனர். அதில், இரவு தூங்கி கொண்டிருக்கும் போது, ஒருவரின் கழுத்தை அவர்களே அறுக்க திட்டமிட்டதாக தெரியவந்தது. இதையெல்லாம் அவர்களுடன் இருந்தவர்களே எங்களிடம்கூறினர். இது குறித்து அய்யாகண்ணுவிடம் கேட்டதற்கு அவர் மறுத்து விட்டார். உத்திர பிரதேசத்தில் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்ததுபோல் தங்களது விவசாய கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்கின்றனர். உத்தரபிரதேசத்தில் இருப்பது பாஜ அரசு. அதுமட்டுமல்ல உத்தரபிரதேசத்தில் மத்திய அரசு விவசாயகடனை தள்ளுபடி செய்யவில்லை. மாநில அரசுதான் விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளது. மத்திய அரசு அனைத்து மாநில அரசையும் ஒன்று போல்தான் கருதுகிறது. இதற்கு ஒரு தீர்வுகாண முயற்சித்து வருகிறது. எந்த போராட்ட காரர்களையும் போராட்ட களத்தில் சென்று பிரதமர் பார்ப்பது கிடையாது. ஒருநாளைக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் அந்த பகுதியில் போராட்டம் நடத்திவருகின்றனர். அவர்கள் அனைவரையும் மோடி சந்திக்க முடியும் என்பது சாத்தியமில்லை.
நான் அய்யாகண்ணுவிடம் போராட்டத்தை கைவிடுங்கள். பிரதமரை சந்திக்கலாம் என்று கூறினேன். அதற்கு பிரதமர் சந்திக்க வந்தால்கூட எங்கள் பிரச்னை தீராமல் அவரை சந்திக்கமாட்டோம் என்று கூறினார். தமிழகத்தில் தலைமை இல்லாத ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். தமிழக அரசுதான் செய்ய வேண்டும்: மதுரை விமான நிலையத்தில், நிருபர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கூறும்போது, “உத்தரபிரதேச மாநில அரசு விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்துள்ளது. தமிழகத்தை வறட்சிமாநிலமாக அறிவித்ததன் எதிரொலியாக மத்தியகுழு நேரில் ஆய்வுசெய்தது. அதன் அடிப்படையில் மத்திய அரசும், தமிழகத்திற்கு வறட்சிநிவாரணம் ஒதுக்கியது. எனவே தமிழக அரசுதான், விவசாயிகளின் பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழக அரசுதான் சரியான முடிவெடுத்து இப்பிரச்னைக்கு தீர்வுகாணவேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.
குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ... |
அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ... |
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.