அந்திம காலத்திலிருக்கும் விகடன் அவப்பெயருடன் அழிய வேண்டாம்!

விற்பனை விரகதாபத்தில் மறைமுகமாகத் தான் இத்தனை நாளாக வேசித்தனம் செய்து வந்தீர்கள். இப்பொழுது வெளிப்படையாகவே சாலை நடுவில் நின்று துணியை விலக்கி அழைக்கும் அளவுக்குத் தரம் தாழ்ந்து விட்டீர்கள். வியாபாரப் போட்டி நிறைந்த களத்தில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாவிட்டால், வேறு தொழிலுக்கு மாறிவிடுவது உத்தமம். இன்றைக்கு தாய் நாட்டைப் பற்றி இழிவாகப் பேசக் கூசாத உங்கள் பணவெறியால், நாளை அதனினும் கீழ்த்தரமாக இறங்கி விடக் கூடாதே என்ற நல்லெண்ணத்தில் தான் இதை எழுதுகிறேன்.

 

தேசபக்தி என்பது, ஏதோவொரு கட்சிக்குச் சொந்தமானது போல மாயையை முறுக்கி விட்டுத் திரிகிறீர்கள். பசுவும், காவியும், தேசபக்தியும் ஏதோ பாஜக கண்டு பிடித்ததைப் போல கிளப்பி விட்டிருப்பதன் மூலம் ஓர் அடிமுட்டாளை விட்டு புனைப் பெயரில் கட்டுரை எழுதச் சொல்லியிருக்கிறீர்கள் என்று அப்பட்டமாகத் தெரிகிறது. பாஜக நேற்று முளைத்த கட்சி, ஆர்.எஸ்.எஸ் நூறாண்டுகள் கூட முழுமை பெறாத அமைப்பு. காவியையும் தேசபக்தியையும் பாஜகவுக்குப் பட்டா போட்டுக் கொடுக்க கட்டுரையாளர் யார்? ஆனால், பசுவும், காவியும், தான் வாழும் பூமியை தாயாகப் பார்க்கும் வழக்கமும் இந்த புண்ணிய பூமியின் பல்லாயிரம் ஆண்டுகளாக இருக்கும் அடிப்படை அடையாளங்கள். இந்தச் சின்ன விசயம் கூடத் தெரியாத தற்குறியை விட்டு கட்டுரை எழுதச் சொல்லியிருப்பதன் மூலம், உங்க அப்பாவும் தாத்தாவும் கட்டிக்காத்த நிறுவனத்தைக் கையாளத் துளியும் அறுகதையற்றவர் என்பதை ஊரறியச் செய்திருக்கிறீர்கள். பாஜகவும், ஆர்,எஸ்,எஸ்-ம் நாட்டின் மீது பற்றினைத் தூண்டுகிறது என்பது பாராட்ட வேண்டிய விசயம் ஆனால், அதைக் குற்றச் செயலாக பிரச்சாரம் செய்யும் உமது  நோக்கம் நாட்டில் பிரிவினையைத் தூண்டும் செயல் தானே? 

 

மதச் சண்டை புள்ளிவிபரங்கள் எல்லாம் ரொம்பப் பழசய்யா பழசு. பல விஜயகாந்த் படங்களில் பார்த்துச் சலித்தாகி விட்டது. சுதந்திரம் கிடைக்கப் போகிறது என்ற அலை பரவிய நாளிலிருந்து இன்றைய தேதி வரை இந்த தேசத்தில் ஒவ்வொரு நாளும் ஏதோவொரு மூலையில் சாதி/மத/இன மோதல்கள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. அதையெல்லாம் தாண்டியும், உம்மைப் போன்ற கூலிக்கு மாரடிக்கும் கூட்டங்களின் பித்தலாட்டப் பிரச்சாரங்களைத் தாண்டியும் தான் இந்த தேசம் வளர்ந்து கொண்டிருக்கிறது. மதச் சண்டை பற்றி இது வரை இல்லாத அக்கறை திடீரென்று விகடனுக்கு எப்படி முளைத்தது?  யார் இத்தனைக் கீழ்த்தரமாக ஆதாரமில்லாத செய்திகளை எழுத் தூண்டினார்கள் விகடனை?

 

தேசபக்திக்காக யாரும் நெஞ்சைக் கிழித்துக் கொள்ளத் தேவையில்லை. உம்மைப் போன்ற வஞ்சகர்களை நித்திக்கத் தெரிந்திருந்தாலே போதும். அதுவே சிறந்த தேசபக்தி.  சுதந்திரப் போராட்ட காலத்தில் எல்லோரும் போராட்டக் களத்தில் இறங்கவில்லை. ஆனால், களத்தில் இறங்கிப் போராடிய வெகு சிலர் மீது பொதுஜனங்களும் பத்திரிக்கைகளும், அதீத அன்பும் மரியாதையும் கொண்டிருந்தனர். அந்த அன்பும் மரியாதையும் கூட தேசபக்தி தான். தேசத்தின் மீது பற்று வைத்திருந்தாலே எதிரிகள் என்று எழுதும் உம்மை விட தேசத்திற்கு கேடு வேறேதும் இல்லை. விகடன் தலையங்கம் காட்டிய தேசப்பற்றினை அந்தக் குடும்ப வித்தே, தேசப்பற்று என்பது நாட்டிற்கான அச்சுறுத்தல் என்று கட்டுரை எழுத அனுமதித்திருப்பது கீழ்த்தரம். கேவலம். 

 

2014ல் ஒரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் கூட வராதற்கு பாஜகவின் மதவாதமே காரணம் என்று குற்றம் சாட்டுவதைப் போன்ற சிறுபிள்ளைத் தனம் வேறேதும் உண்டா? ஜனநாயக நாட்டில் எவரும் தனியாகவோ, விரும்பிய அமைப்பின் சார்பாகவோ போட்டியிடலாம் எனும் பொழுது, இஸ்லாமியர்கள் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை என்பதற்கு பாஜக எப்படி பொறுப்பாகும்? விட்டால் பாஜக தனக்கு விழுந்த ஓட்டுகளைப் பிரித்து இட ஒதுக்கீடு போல கொடுக்க வேண்டும் என்று பிதற்றுவீர் போலிருக்கு. கோமாளிகளா! 20% இஸ்லாமியர்கள் இருக்கும் இடத்தில் ஓட்டுக்காக இஸ்லாமியர்களை நிறுத்தி நாடகம் போடாமல் இருந்தற்காகத் தான் மக்கள் ஓட்டுப் போட்டிருக்கிறார்கள். எஸ்.பியும் பி.எஸ்பியும் அத்தனை இஸ்லாமியர்களை நிறுத்தியும் ஏன் மக்கள் ஓட்டுப் போடவில்லை? உம்மைப் போன்ற பொய்ப்பிரச்சாரம் செய்ததில் எரிச்சலடைந்ததால் தான். 

 

மதமாற்றத் தடைச் சட்டம் என்ற பதத்தை ஒழுங்காகப் படிக்கத் தெரிந்திருந்தால் கூட அதன் அர்த்தம் புரிந்திருக்கும் மூடனே! மதம்மாறத் தடையல்ல மதம் மாற்றத் தான் தடை கோருகிறார்கள். உன் தரத்திற்குப் புரியும் படிச் சொல்கிறேன். உன் வீட்டுப் பெண் மாற்றானோடு விரும்பிப் போவதில் தவறில்லை. நீயே கூட்டிக் கொடுப்பது தான் தவறு. இப்பொழுது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். மதவாதம் பற்றி எழுதிய அற்பப் பதருக்கு சோனுநிகம் என்ற பாடகனின் தலை மசுருக்கு பத்து லட்சம் விலை பேசிய மௌல்வியின் பயங்கர அச்சுறுத்தல் பற்றி ஏதும் தெரியவில்லையோ? கட்டுரையின் ஒவ்வொரு வரியிலும் கட்டுரையாளரின் முட்டாள்த்தனமும், சமூக விரோத சிந்தனையும் மட்டுமே விஞ்சி நிற்கிறது. இத்தகைய சமூக விரோத கட்டுரையை மிகக் கடுமையாகக் கண்டிக்கிறேன்.

 

ஐயா சீனிவாசனே! இந்தத் தொழிலில் உங்களால் சோபிக்க முடியாவிட்டால் ஒட்டு மொத்தமாக விற்று விட்டு வேறு ஏதேனும் செய்து பிழைத்துக் கொள்ளுங்கள். அரசியல் செய்ய பாஜக/ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடியை நேரடியாகத் திட்டி மோதிக் கொள்ளுங்கள். பெரும்பாண்மை மக்களின் நம்பிக்கையான மதத்தையும், ஒட்டுமொத்த நாட்டின் பாதுகாப்பிற்கு அடித்தளமாக இருக்கு தேசப்பற்றினையும் வைத்து வியாபாரம் செய்யாதீர்.   அந்திம காலத்திலிருக்கும் விகடன் அவப்பெயருடன் அழிய வேண்டாம்! 

 

நாட்டின் ஒருமைப்பாட்டினைச் சீர்குலைக்கும் வகையான அவதூறுக் கட்டுரைக்கு மன்னிப்புத் தெரிவித்து பிராயச்சித்தம் தேடிக் கொள்ள வலியுறுத்துகிறேன்.

 

வந்தே மாதரம்! ஜெய்ஹிந்த்!

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமரின் தொலைநோக்கு பார்வையை ...

பிரதமரின் தொலைநோக்கு பார்வையை நனவாக்க உற்பத்தி வசதிகளை மேம்படுத்துவது அவசியம் கிரிராஜ் சிங் புதுதில்லியில் உள்ள யஷோ பூமி மாநாட்டு மையத்தில் 71-வது ...

நகர்ப்புற தூய்மை இந்தியா 2.0 திட் ...

நகர்ப்புற தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் தூய்மை பயிற்சி இயக்கம் தொடங்கப்பட்டது பருவமழை வருவதையடுத்து தூய்மை மற்றும் துப்புரவின் சவால்கள் அதிகரித்துள்ளன. ...

நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் அண ...

நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் அணுமின் உற்பத்திதிறன் 70 சதவீதம் அதிகரிக்கும் மத்திய அணுசக்தி துறை இணை  அமைச்சர்  கூறியுள்ளா நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் அணுமின் உற்பத்தித்திறன் 70 ...

அவசரநிலைக் காலத்தில் மோடி

அவசரநிலைக் காலத்தில் மோடி அவசரநிலை காலத்தில் அரசியல்ரீதியான கைதுகள் நடத்தபட்டதால், அப்போது இளைஞராக ...

ஜிஎஸ்டி140 கோடி இந்தியர்களின் வா ...

ஜிஎஸ்டி140 கோடி இந்தியர்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளது ஏழுவருட ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையானது, 140 கோடி இந்தியர்களின் ...

புகையிலை இல்லாத கல்வி நிறுவனங் ...

புகையிலை இல்லாத கல்வி நிறுவனங்கள் குறித்த நாடு தழுவிய இயக்கத்தை கல்வி அமைச்சகம் தொடங்கியது புகையிலை பயன்பாடு இந்தியாவில் தடுக்கக்கூடிய இறப்புகள் மற்றும் நோய்களுக்கான ...

மருத்துவ செய்திகள்

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...