இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக 60 கோடி பேரம் பேசி அட்வான்சாக 1.3கோடி கொடுத்த தமிழக அரசின் ஆலோசகர் பவன் ரெய்னா IAS டில்லியில் கைது.. TTV தினகரன் கைது
தமிழ்நாட்டிற்கு மிகுந்த தலைகுனிவை ஏற்படுத்தும் செயலில் தொடர்ந்து TTV தினகரன் அணியினர் ஈடுபட்டு வருவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. பணம் பாதாளம் மட்டும் பாயும் என்பதை யார் புரிந்து வைத்திருக்கின்றார்களோ இல்லையோ தமிழர்கள் நன்கு புரிந்து வைத்திருக்கின்றனர்.
கூவத்தூர் சம்பவம், ஆர்.கே நகர் சம்பவம் அதனைத் தொடர்ந்து இரட்டை இலை சின்னத்தைக் கைப்பற்ற மேற்கொள்ளப்பட்டு வரும் முறைகேடுகள் என்று அகில இந்திய அரசியலில் தமிழகம் பற்றி மிக மோசமான அபிப்ராயங்களை உருவாக்கிவருகின்றன.
எல்லா முறைகேடுகளுக்கும் அடிப்படை.. அரசியல்வாதிகள் அல்ல..வெட்கமேயில்லாமல், வாக்களிக்க ஐந்துக்கும் பத்துக்கும் அடிபிடி போடும் நாம்தான் முழு முதற் காரணம். யாருக்கும் இங்கு வெட்கமில்லை. நல்லவர்கள் வாக்களிக்க முன்வருவதில்லை. இளைஞர்கள் சினிமா நடிகர்களின் முகம் பார்த்து வாக்களிக்கக் காத்திருக்கின்றனர்.
எஞ்சியுள்ளோர் ஏதோ ஒரு கட்சிக்கு பரம்பரை பரம்பரையாய் அடிமைகளாய் மாறிவிட்டனர். தனக்குப் பிடித்த கட்சியின் தலைவர்கள் எது செய்தாலும் அது சரிதான் என்று கண்ணை மூடிக்கொண்டு வாதிடுவதற்கு ஒவ்வொரு தமிழனும் தயாராக இருக்கிறான். பிறகு எப்படி நல்ல தலைவர்கள் உருவாகுவார்கள்?
நல்ல அரசாங்கம் எங்கிருந்து கிடைக்கும்? ஒரு வளர்ச்சித் திட்டமில்லை. எதிர்கால உற்று நோக்கலில்லை. தேர்தல் பிரச்சாரங்களில் மதுவும், துட்டும், அரை குறையாடைக் குத்தாட்டங்களும் போதும் என்கிற மனநிலைக்கு எப்போதோ நாம் ஒவ்வொருவரும் வந்துவிட்டோம். வேலியே பயிரை மேய்கிறது.
எளியவனின் குரலுக்கு எங்கும் மதிப்பும் இல்லை.. எவ்வித மரியாதையும் இல்லை.
வல்லான் வெட்டுவதே வாய்க்கால் என்றாகிப் போய்விட்டது.
பள்ளிக்கூடங்களில் என்ன கற்பிக்கப்படுகிறது என்பது பற்றி எவருக்கும் அக்கறையில்லாமல் போய்விட்டது.
ஒன்பதாம் வகுப்புகளில் பத்தாம் வகுப்பு பாடங்களும், பதினொன்றாம் வகுப்புகளில் பனிரெண்டாம் வகுப்புப் பாடங்களும் கற்பிக்கப்படுவது தமிழகம் முழுவதும் பரவலாகிவிட்டது.
பள்ளிக்கூடங்களே தேர்வுகளில் பார்த்தெழுதுவதை ஊக்கப்படுத்த ஆரம்பித்தாகிவிட்டது.
சில மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆரம்பித்து வைத்த ப்ளக்ஸ் போர்டு கலாச்சாரங்களுக்கு தமிழ் வழிக் கல்வி நிறுவனங்களும் இன்றைக்கு விதிவிலக்கில்லை என்றாகிப் போய்விட்டது.
ப்ளக்ஸ் போர்டு வைக்காத பள்ளிகளையும், அதிகக் கட்டணம் கேட்காத பள்ளிகளையும் நாய்கூட இன்றைக்கு மதிப்பதில்லை.
தமிழகம் தாண்டி வேறெந்த மாநிலத்திலேயும் இப்படி ஒரு அவல நிலை இருக்குமா என்பது தெரியவில்லை.
வலுத்தவனே வாழத் தகுதியுடையோன் (Survival of the fittest) என்ற டார்வினசக் கோட்பாடே எல்லாவற்றுக்கும் அடிப்படையாகிப் போய்விட்டது.
பத்தாம் வகுப்பில் பார்த்து எழுதி மதிப்பெண் வாங்கும் மாணவன் கல்லூரிக்குப் போனதும் internal test-ற்கே தேர்வுக்கு முன்பாகவே வினாத்தாளைக் கொடுங்கள் என்று பேராசிரியரிடம் துணிந்து கேட்கிறான். கொடுக்கத் தயாராக இல்லாத பேராசிரியர் மாணவர்களால் அவமானப்படுத்தப்படுகிறார்.
தேர்ச்சி பெறுவதற்குத் தேவையான மதிப்பெண்களை மட்டும் எந்த வழியிலாவது பெற்றால் போதும் என்று குறுகிப்போனது நமது துரதிர்ஷ்டமே.
என்ன எழுதினாலும் மார்க் போடு.. 25யை 35 என்றாக்கு என்கிற ஓசைகள் மதிப்பீட்டு மையங்களிலேயே கேட்கிறது.
பள்ளிக்கூடத்திற்கே வராவிட்டாலும் தேர்ச்சி கொடு என்று அரசாங்கமே சொல்ல ஆரம்பித்துவிட்டது.
16 வயது பையனுக்கே இலவசமாய் கம்ப்யூட்டர் கொடுத்து, ஊரெங்கும் இலவச வைஃபை வசதி செய்து கொடுத்து, அந்த வயசிலேயே நிர்வாணப்படங்களையும் உடலுறவுக் காட்சிகளையும் இலவசமாய் பார்ப்பதற்கு நாமே அவனுக்கு வழிகளைத் திறந்து விட்டாச்சு.
தமிழகத்தில் மட்டும்தான் முதலமைச்சர் என்பவர் வானத்திலிருந்து வந்திறங்கிய தேவதூதர்களாக சித்தரிக்கப்படுகின்றார்கள்.
பொதுமக்கள் அவர்களைச் சந்திக்கக்கூட முடியாது. அவர்களுக்கும் பொது ஜனங்களுக்கும் இடையே ஒரு இரும்புத்திரை இருக்கும்.
அதைப் பெருமையாக வேறு இந்த சமூகம் கொண்டாடுகிறது.
எல்லா இடங்களிலும் இலஞ்சம் தலைவிரித்தாடும். அது எல்லோருக்கும் தெரியும்.
இலஞ்சம் கொடுக்க முன் வராதவன் இங்கு பைத்தியக்காரன்.
இலஞ்சம் வாங்கத் தயாராக இல்லாத அரசு அலுவலர்கள் இழிபிறவிகள் இங்கு.
மதுபான விற்பனைக்கு தமிழகத்தில் மட்டும்தான் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. அதுகுறித்து எவருக்கும் வெட்கமேயில்லை.
முறத்தால் புலிகளை விரட்டிய பெண்மணிகள், இன்றைக்கு குடிகாரக் கணவனோடு மல்லுக் கட்டிக் கொண்டிருப்பது எவர் கண்ணையும் உறுத்தவேயில்லை.
மணலைக் கொள்ளையடித்தாகிவிட்டது.
மலைகளைச் சுரண்டியாகிவிட்டது.
தண்ணீரைக் காணாமல் போகச் செய்தாகிவிட்டது.
காற்றை நச்சுப்படுத்தியாகிவிட்டது.
விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக்கிவிட்டது.
இன்னும் எதையிங்கு மிச்சம் வைத்திருக்கின்றோம்?
இந்நிலை இனி எப்படி மாறும்?
எங்கிருந்து சுத்திகரிப்பை ஆரம்பிப்பது?
எவர் வந்து என் தேசத்தைக் காப்பாற்றப் போகிறார்?
பயமாகத்தான் இருக்கிறது.
இப்பொழுதே ஒவ்வொருவரும் விழித்தாக வேண்டிய காலமிது.
நாம் திருந்தாமல் நாட்டைத் திருத்த முடியாது.
இப்போது திருந்தாவிட்டால் இனி ஒருபோதும் முடியாது.
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
Leave a Reply
You must be logged in to post a comment.