ஆதார் கட்டாயத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்தவழக்கில் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்த சுப்ரீம் கோர்ட் ஆதார் எண் விவகாரத்தில் நீதிமன்றம் ஒருமுடிவுக்கு வரும் வரையில் அரசு திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்படக்கூடாது என்று கூறியிருந்தது.
இந்நிலையில், ஆதார் அட்டை கட்டாயமில்லை என்ற உத்தரவை மாற்றியமைக்கக்கோரிய வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டது. இந்தவழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் முகுல்ரோஹத்கி, ஆதார் அட்டைக்கு ஆதரவான வாதங்களை முன் வைத்தார்.
"ஆதார்பெற கைரேகைப் பதிவு கட்டாயம் என்பதில் விதி மீறல் இல்லை. சமுதாயத்தை ஒழுங்குபடுத்த ஆதார் போன்றவை மிகவும் அவசியம். ஆதாருக்கு கைரேவை உள்ளிட்டவற்றை பதிவுசெய்வதில் உரிமை மீறல் கிடையாது. ஆதாருக்கு எதிரான மனுக்கள் அதிக அர்த்த முடையவை அல்ல. தனிநபர் விவரங்களுக்காக டிஎன்ஏ சோதனை செய்யவும் மத்திய அரசிடம் திட்டம்உள்ளது.
ஆதார் அட்டையை போலியாக தயாரிக்க முடியாது என்பதாலேயே கட்டாயபடுத்தப் படுகிறது.போலிகள் தயாரிக்க முடியாத அளவு நடவடிக்கை எடுக்கபட்டு உள்ளது. என்று ரோஹத்கி வாதிட்டார்.
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ... |
இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.