விவசாயத் துறையில் ‘நிலைத்த பசுமைப் புரட்சி’யை ஏற்படுத்த வேண்டும்

விவசாயத்துறை சந்தித்துவரும் சவால்களை எதிர்கொள்வதற்கு, அந்த துறையில் 'நிலைத்த பசுமைப் புரட்சி'யை ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தியுள்ளார்.


புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானி எம்எஸ்.சுவாமிநாதன் எழுதியுள்ள 'எம்.எஸ்.சுவாமிநாதன்: பட்டினியில்லா உலகத்துக்கானதேடல்' என்ற புத்தகத்தின் இருபாகங்களின் வெளியீட்டு நிகழ்ச்சி, தில்லியில் பிரதமர் மோடியின் இல்லத்தில் வெள்ளிக் கிழமை நடைபெற்றது. அந்த புத்தகத்தை வெளியிட்டு, பிரதமர் பேசியதாவது:
'உணவு பாதுகாப்பு' என்ற கோட்பாட்டில் இருந்து 'ஊட்டஉணவியல் பாதுகாப்பு' என்ற கோட்பாட்டுக்கு மாறவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதற்கு, அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் உதவி அவசியம்.
நமது நாடு 75-ஆவது சுதந்திரத்தினத்தை கொண்டாடும் 2022-ஆம் ஆண்டுக்குள், விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக அதிகரிக்க வேண்டும் என்ற கனவை நனவாக்க இந்த அரசு தீவிரமாக பணியாற்றிவருகிறது.

 

நாட்டில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. எனவே, குறைவான நிலத்தில் அதிக விளைபொருள்களை விளைவிக்க வேண்டியதேவை உள்ளது. விவசாயத் துறையில் சவால்கள் நீடித்து வருகின்றன. முதல் பசுமை புரட்சி, இரண்டாம் பசுமைப் புரட்சி ஆகியவை குறித்துதான் நாம் இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், 'நிலைத்த பசுமைப் புரட்சி'தான் நமது இலக்காக இருக்கவேண்டும். அப்போதுதான், நிலைத்த விளைபொருள் உற்பத்தியை எட்ட முடியும்.


நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொருளாதார சமச் சீரின்மை நிலவுகிறது. இப்பிரச்னை சரிசெய்யப்பட வேண்டும். அப்போதுதான், நாடு தொடர்ந்து முன்னேறமுடியும். பாரம்பரிய விவசாய நடைமுறைகளுடன் அறிவியல் வழிமுறைகளும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். தொழில்மண்டலம் போல விவசாய மண்டலங்கள் ஏற்படுத்தப்படுவதுடன், இத்துறையில் ஏராளமான ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.


விவசாயிகளுக்கு பயனளிக்கக் கூடிய பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். பிரதமரின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்ட காப்பீடுகள், ஒரேஆண்டில் 7 மடங்கு அதிகரித்துள்ளன.நமது நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை பெரியபிரச்னையாக உள்ளது. இதற்கு நிரந்தரத்தீர்வு காண்பதற்காக, 50 ஆண்டுகளுக்கான தொலை நோக்கு திட்டத்தை உருவாக்க வேண்டும். இப்பிரச்னை குறித்து பொது மக்களுக்கும் விழிப்புணர்வு அவசியம். இந்தியாவை பொருத்தவரை, 85 சதவீதம் நடுத்தர விவசாயிகளே உள்ளனர். அவர்கள் மத்தியில், விவசாயத் தொழில் நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.


இன்றைய இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், திரைப்பட நடிகர்கள் மற்றும் ஒருசில அரசியல்வாதிகளால் கவரப்படுகின்றனர். ஆனால், எம்.எஸ்.சுவாமிநாதன் போன்ற புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானிகளை, இளைஞர்கள் முன்மாதிரியாக எடுத்து கொள்ளாமல் இருப்பது வருத்தமளிக்கிறது .மேலும், வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக்கும் அரசின் திட்டத்துக்காக சுவாமிநாதன் பல்வேறு  ஆலோசனைகளை வழங்கியிருப்பதாகவும், அவையனைத்தும் பயனுள்ளவை என்றும் கூறிய மோடி, அவருக்குப் புகழாரம் சூட்டினார்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக் ...

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக்கள் நிராகரித்து விட்டனர் –  மோடி  'பார்லியில் மக்களுக்காக என்றுமே காங்., பேசியதில்லை. அதிகாரப் பசி ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக் ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது – மோடி “நாட்டில் குறைந்து வரும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள் – பிரதமர் மோடி அழைப்பு  'என்.சி.சி.,யில் அதிகமான இளைஞர்கள் இணைய வேண்டும். வளர்ந்த இந்தியாவை ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

மருத்துவ செய்திகள்

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...