தெற்காசிய நாடுகளை நேரடியாக இணைக்கும் முக்கியத்திட்டமான மேகாலயா- மியான்மர் தேசியநெடுஞ்சாலை திட்டப்பணிகள் அடுத்தமாதத்தில் தொடங்க உள்ளன. இந்தியா – மியான்மர் – தாய்லாந்து நாடுகளை சாலை வழியாக இணைக்கும்திட்டத்தின் பகுதியாக இது செயல்படுத்தப் படுகிறது.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின்கட்கரி இது தொடர்பாக கூறியதாவது:
ரூ.5,000 கோடியில் செயல்படுத் தப்படும் இந்ததிட்டம் அடுத்த மாதத்திலிருந்து தொடங்கி வைக்கப்படும். இந்தியா, தாய்லாந்து மற்றும் மியான்மர் நாடுகளை இணைக்கும் விதமாக 1,400 கிமீ தூரத்துக்கு இந்தநெடுஞ்சாலை அமையும். தெற்காசிய நாடுகளை இணைக்கும் விதமான இந்தசாலை மூலம் வர்த்தகம் மற்றும் தொழில்கள், மருத்துவம், கல்வி மற்றும் சுற்றுலா போன்ற தொழில்கள் இந்த நாடுகளில் வளரும் என்றும் குறிப்பிட்டார். மேலும் பிரம்ம புத்திரா ஆற்றை பயன்படுத்தி பங்களாதேஷ் வழியாக மியான்மரை நீர்வழி பாதை மூலம் இணைப்பதற்கான திட்டமும் அரசிடம் உள்ளது. இந்த திட்டம் விரைவில் முடிவடையும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
இந்ததிட்டம் 2018-ம் ஆண்டுக்குள் முடிவடையும் என்று குறிப்பிட்ட கட்கரி, நீர் வழிபாதையின் மூலம் இதர போக்குவரத்து வழிகளைவிட செலவுகளை குறைக்கமுடியும். மியான்மர் மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு சரக்குகளை கொண்டுசெல்லவும் வர்த்தகம் மேற்கொள்ளவும் சாலை மற்றும் ரயில் வழித்தடங்களை விட மிகச்சிறந்த தீர்வாக இருக்கும்.
இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ள 111 தேசிய நீர் வழிப்பாதைகளில், அடுத்த ஆண்டுக்குள் குறைந்தபட்சம் 10 வழிகளையாவது செயல்படுத்தவேண்டும் என்கிற முனைப்பில் அரசு உள்ளது. நீர் வழிப்பாதைகளை மேம்படுத்த மத்திய அமைச்சரவை ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடுசெய்துள்ளது என்று கூறினார்.
கங்கை நதியில் உலகவங்கி உதவியுடன் ரூ.5,000 கோடியில் நீர்வழி பாதைக்கான பணிகள் மிகப்பெரிய அளவில் நடந்து வருகின்றன. இதில் உத்தரபிரதேசத்தின் வாரணாசி, மேற்குவங்கத்தில் ஹால்தியா, பிஹாரின் சாஹெப்கனி என மூன்று நகரங்களும் பல்துறை தொழில்கேந்திரங்களாக அமைகின்றன. நீர் வழிப்பாதை முயற்சிகள் சுற்றுச்சூழல் சார்ந்த சிறந்த முயற்சியாகவும் இருக்கும் என்றும் கட்கரி கூறினார்.
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.