மானியவிலையில் மண்ணெண்ணை மற்றும் அடல் ஓய்வூதிய திட்டப்பயன்களை பெறுவதற்கும் ஆதார் அடையாள அட்டை சமர்ப்பிக்கவேண்டும் எனறு மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடுமுழுவதிலும் உள்ள ரேஷன்கடைகள் மற்றும் கூட்டுறவு பண்டக சாலைகளில் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கேற்ப மானியவிலையில் மண்ணெண்ணை வழங்கப்படுகிறது.
சமையல் எரிவாயு உருளைகளுக்கு மத்திய அரசு அளிக்கும் மானியத்தொகை தற்போது நேரடியாக நுகர்வோரின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப் படுகிறது. இதை தொடர்ந்து, ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு பண்டகச் சாலைகளில் வழங்கப்படும் மண்ணெண்ணைக்கான மானிய தொகையையும் நுகர்வோர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்திவிட மத்திய எண்ணை மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகம் தீர்மானித்துள்ளது.
இந்த தொகையினை பெற ஆதார் அட்டை அவசியம் என மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது.இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் கூறுகையில், ''மண்ணெண்ணெய் மானியம் அல்லது பொது மக்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் அட்டல் யோஜானா திட்டத்தின் பலன்களை பெறவேண்டுமெனில் ஆதார் அடையாள அட்டை எண்ணை சமர்பிக்க வேண்டும். எனவே, ஆதார் அடையாள அட்டை இல்லாவர்கள் வரும் செப்டம்பர் 30 ம் தேதிக்குள் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் மண்ணெண்ணெய் மானியம் பெற முடியும். அடல் ஓய்வூதிய திட்டத்தை பெற வேண்டுமெனில் ஜூன் 15 ஆம் தேதிக்குள் ஆதார் அடையாள அட்டையைபெற வேண்டும் என்றார்.
அதேசமயம் ஆதார் அடையாள அட்டை வரும் வரை, ரேஷன்கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, விவசாய வங்கிகணக்கு புத்தகம், நூறு நாள் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் வழங்கப்பட்ட அடையாள அட்டை, வட்டாட்சியர் அல்லது அரசு உயரதிகாரியிடம் பெற்ற அடையாள சான்றிழ்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பித்து மேற்கண்ட பயன்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் மானியம் மற்றும் ஓய்வூதியதிட்டங்கள் பயனாளிகளுக்கு முறையாக சென்று சேரவேண்டும் என்பதற்காக ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப் பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.