2016 நவம்பர் எட்டாம் தேதி திடீரென அறிவித்து நடைமுறைப்படுத்திய கள்ளப்பணம் மற்றும் கறுப்புப்பண ஒழிப்பு நடவடிக்கைதான் இன்றைய எதிர்கட்சிகளின் கொந்தளிப்புகளுக்கு காரணம்! முறைகேடாக பணம் சேர்ப்போரின் ஆதரவும் அவர்களுக்கு இருக்கிறது! எனவேதான் நல்ல நல்ல திட்டங்களையெல்லாம் கருப்பு கண்ணாடி போட்டு பார்க்கிறார்கள்!
சந்தைகளில் விவசாயிகள் தங்களின் மாடுகளை விற்க வருவார்கள்! வாங்கவும் வருவார்கள்! இந்த மாட்டை விற்றுவிட்டு இன்னொரு மாடு வாங்கலாம் என்றும் வருவார்கள்! இதில் அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ளூர் கசாப்புக்கடைகளுக்காகவும் வாங்குவது உண்டு!
எதுவுமே அளவோடு இருந்தால் தவறில்லை! சமீப காரணமாக விவசாய மாடுகளை வாங்கி வெட்டி வெளிநாடுகளுக்கு அனுப்புவது பெரிய தொழிலாக வளர்ந்துவிட்டது! இந்த வகையில் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடக்கிறது! ஏற்றுமதி தொழில் நல்லதுதான்! விவசாய மாடுகள் விவசாயிகளுக்கு சந்தையில் வாங்க கிடைக்காதவகையில் ஏற்றுமதியாளர்கள் வாங்கி வெட்டி அனுப்பிவிடும் செயல் தொடர்ந்தால், சந்தையில் விவசாயிக்கு மாடு கிடைக்காத்தால் இயற்கை விவசாயம் பாதிக்கப்படுகிறது, இப்படியே போனால் நம் நாட்டில் இன்னும் இருபதே ஆடுகளில் மாடுகளே இல்லாமல் போய்விடும் நிலை உள்ளது என இரு புள்ளிவிவரம் கூறுகிறது! எனவே விவசாயிகளின் விவசாய தேவைக்களுக்கான விவசாய மாடுகளை பாதுகாப்பதற்காக, சந்தைகளில் மொத்தமாக வாங்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுவதை தடுப்பதற்காக ஒரு ஒழுங்குமுறை திருத்த சட்டம் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது!
உள்ளூர் கசாப்புக்கடைகளுக்காக வாங்குவோர் விவசாயி வீடுகளில் வாங்கலாம், அதற்காகவே மாடுகள் வளர்க்கப்படும் விவசாய பண்ணைகளில் வாங்கலாம், மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்று அந்த ஒழுங்குப்படுத்தும் சட்ட திருத்தத்தில் சொல்லப்படவில்லை! ஆனால் கள்ளப்பணம் மற்றும் கருப்புப்பண ஒழிப்பால் பாதிக்கப்பட்டோர் மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என சட்டம் சொல்வதாக சொல்லி பொய்யை பரப்புகிறார்கள்! அரசியல்வாதிகளைப்போல பாதிக்கப்பட்டோர் ஊடகத்துறையிலும் அதிகமாக உள்ளனர், எனவே இவர்களின் பொய்க்கு அதிக விளம்பரம் கிடைக்கிறது!
சீதாராம் செஞ்சூரி தாக்கப்படவில்லை! எதிர்ப்பு தெரிவித்தவர்தான் தாக்கப்பட்டார்! சீத்தாராம் செஞ்சூரி இந்திய ராணுவத்தை இழிவாக பேசியதால்தான் அவர் எதிர்ப்பு தெரிவித்தார்! எதிர்ப்பு தெரிவித்தவரை கம்யூனிஸ்ட் தீவிரவாதிகள் தாக்கியுள்ளனர்! இந்த சம்பவம் அரசியல் கட்சிகளால் பொய்யாக சொல்லப்படுகிறது! பொய்யான தகவலுக்கு ஊடகங்களின் ஒத்துழைப்பும் உள்ளது! எல்லாவற்றிற்கும் காரணம் கள்ளப்பனம் மற்றும் கருப்புப்பண ஒழிப்பு நடவடிக்கைதான்!
குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் நியாவான்கள் வாழமுடியாது! குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால் அவர்கள் இப்படி அரசை எதிர்த்து செயல்படத்தான் செய்வார்கள்! இதனை நியாயவான்கள் புரிந்துகொள்ளவேண்டும்!
–குமரிகிருஷ்ணன்
குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ... |
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |
"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.