புதுக்கோட்டை மாவட்டம், கீரனுாரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கழிப்பறைவசதி, சைக்கிள் நிறுத்துமிடம், ஆய்வுக்கூடம் போன்ற அடிப்படைவசதிகள் இல்லை. இதனால், பள்ளி அருகிலேயே செயல்படாமல் கிடக்கும் பொதுப் பணித்துறை கட்டடத்தை, பள்ளியின் பயன்பாட்டிற்கு தரக்கோரி, பிரதமர் நரேந்திரமோடிக்கு, இப்பள்ளி மாணவி சரஸ்வதி கடிதம் எழுதியிருந்தார்.
இதையடுத்து, பிரதமர் அலுவலகத்தில் இருந்து, கோரிக்கையை நிறைவேற்றுமாறு, தமிழக தலைமை செயலகத்திற்கு உத்தரவிடப் பட்டிருந்தது. பலமாதங்களாகியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. இதையடுத்து, அந்தமாணவி மீண்டும் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில், 'நாங்கள் அனைவரும் பாசாகிவிட்டோம். உங்கள் உத்தரவு இன்னும், பாசாக வில்லை' என, எழுதி இருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் புதுக்கோட்டையில் நடைபெற்ற மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை திறப்புவிழாவிற்கு வந்த, அமைச்சர் செங்கோட்டையன், கீரனுார் அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று வகுப்பறைகள், கழிப்பறைவசதி, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வுசெய்தார்.
தொடர்ந்து, அருகில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தையும் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.அதன் பின், மாணவி சரஸ்வதியை அழைத்து பாராட்டிய அமைச்சர் செங்கோட்டையன், 'உங்கள் உத்தரவு பாசாகிவிட்டது' என, மீண்டும்,பிரதமருக்கு கடிதம்எழுதும்படி கூறினார்.
கடைக்கோடி குடிமகளின் கோரிக்கைக்கும் செவிமடுத்து கோரிக்கையை நிறைவேற்றிய பிரதமர் மோடியை வாழ்த்துவோம்.பிரதமரின் உத்தரவையேற்று உரியநடவடிக்கை பரிந்துரைத்த தமிழக கல்வி அமைச்சர் அவர்களுக்கு நன்றி.
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.