இந்திய அரசின் மூன்றாண்டு சாதனைகளை மக்களுக்கு தெரிவிப்பதற்காக வ.உ.சி துறை முகத்தால் இன்று தென்காசி இசக்கி மகாலில் "அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம்" என்றவிழா நடத்தப்பட்டது.
இந்தவிழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய சாலை போக்கு வரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல்துறை இணை அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசியவர் பிரதமரின் தொலைநோக்கு திட்டங்களால் நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சிபெற்றுள்ளது என்று தெரிவித்தார்.
“உஜ்வலா திட்டம், ஜன்தன், திறன்வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதன் மூலம் நாட்டில் அனைவருக்குமான வளர்ச்சிகிடைத்துள்ளது. உலக அளவில் கப்பல் துறை சரிவை சந்தித்து கொண்டிருக்கும் இந்த வேளையிலும்கூட இந்தியாவில் கப்பல்துறை ஏறுமுகமாக உள்ளது. இந்தவளர்ச்சியின் பின்னணியில் உள்ளவர் நமது இந்திய பிரதமர்,” என்றார்.
இந்த விழாவில் வரவேற்புரை ஆற்றிய வ.உ. சிதம்பரனார் துறைமுக பொறுப்புக்கழக தலைவர் திரு ச. ஆனந்த சந்திரபோஸ் தனது உரையில் வ.உ.சி துறைமுகம் கடந்த மூன்றாண்டுகளில் பல்வேறு சாதனைகள் புரிந்து சிறப்புவிருதுகளை பெற்றுள்ளது என்று தெரிவித்தார்.
இதுவரை இல்லாத அளவிற்கு இந்தியாவில் கப்பல் துறைக்கு முதன்முறையாக மக்கள்மத்தியில் கவனம் கிடைத்துள்ளது,” என்றார்.
இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ... |
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.