ஜூலை மாதத்துடன் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து ஜனாதிபதி தேர்தல் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுக்கள் 14 ம் தேதிமுதல் தாக்கல் செய்யப்பட்டுவருகிறது.
இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளாராக பீகார்கவர்னர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டார். இன்று நடைபெற்ற பாஜக ஆட்சிமன்றகுழு கூட்டத்திற்கு பிறகு இந்த அறிவிப்பை அக்கட்சியின் தேசியதலைவர் அமித்ஷா வெளியிட்டார்.
ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பிறகு ராம்நாத் கோவிந்திற்கு ஆதரவு அளிக்குமாறு, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ், பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார், தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோரிடம் தொலைபேசி மூலமாக பிரதமர் நரேந்திரமோடி ஆதரவு கோரினார்.
பிரதமரின் கோரிக்கையை ஏற்று தெலுங்குதேசம் கட்சி தலைவரும் தெலுங்கனா முதல் மந்திரியுமான சந்திரசேகர் ராவ், ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தனர். ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து ஓரிரு நாளில் முடிவு அறிவிக்கப்படும் என்று தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா தெரிவித்துள்ளது.
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |
இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ... |
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.