கேரள பயணத்தின்போது பிரதமர் நரேந்திரமோடி பயங்கரவாத அச்சுறுத்தலை சந்தித்தார் என்று அந்த மாநில காவல்துறை தலைவர் (டிஜிபி) டி.பி.சென்குமார் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம், கொச்சியில் மெட்ரோரயில் சேவையின் முதல்கட்டத் தொடக்கவிழா கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.இதில், பிரதமர் மோடி சிறப்புவிருந்தினராகப் பங்கேற்றார். மேலும் கேரள ஆளுநர் பி.சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன், மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர்.
இதையொட்டி, அங்கு பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. எனினும், அந்தப் பயணத்தின்போது பிரதமர் மோடி பயங்கரவாத அச்சுறுத்தலை சந்தித்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, கேரள காவல்துறை தலைவர் டி.பி.சென்குமார் செய்தியாளர்களிடம் செவ்வாய்க் கிழமை கூறியதாவது:
மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழாவையொட்டி பிரதமர் மோடி சனிக்கிழமை கொச்சிவந்தார்.
அப்போது, அவரைத் தாக்கும் வகையில் பெரிய அளவிலான பயங்கரவாத அச்சுறுத்தல் இருந்தது. எனினும், இதுகுறித்து இப்போது விரிவாகக்கூற முடியாது.
கொச்சி அருகே எரிவாயுமுனையம் வரவிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றம் அருகே சிலர் கடந்த வெள்ளிக்கிழமை திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் பிரதமர் பயணம்செய்யவிருந்த பாதையிலும் குறுக்கீடு செய்யத் திட்டமிட்டிருந்தனர்.இதன் காரணமாகவே, காவல் துறையினர் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர் என்றார் சென்குமார்.
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.