அஸ்ஸாமில் பெய்துவரும் கன மழையால், அங்கு பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பிரதமர் நரேந்திரமோடி, அஸ்ஸாம் முதல்வர் சர்பானந்த சோனாவாலை தொலை பேசியில் தொடர்புகொண்டு, தற்போதைய சூழல் குறித்து விசாரித்துள்ளார். மேலும், மத்திய அரசு அஸ்ஸாமுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்துதருவதாகவும் உறுதியளித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் பெய்துவரும் கனமழையால், பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் மாநிலம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தின் பாப்பம்பேரே மாவட்டத்தில், நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஐந்துபேர் பலியாகினர். ஒன்பது பேரை காணவில்லை. அஸ்ஸாமில் கனமழைக்கு ஆறு பேர் பலியாகியுள்ளனர். அஸ்ஸாமின் 23 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வெள்ளத்தில் தத்தளித்தமக்கள், கோலாகாட் மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்களில் நிலவிவரும் சூழல் குறித்து ட்வீட் செய்துள்ள பிரதமர் மோடி, “வட கிழக்கு மாநில மக்களுக்கு உறுதுணையாக இந்தியா. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை எண்ணிவருந்துகிறேன். மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண்ரிஜ்ஜு, பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்துதருவார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ... |
மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.