தமிழ் திரை நடிகர்கள் அரசியல் பேச , அடுத்தவனை குற்றம் சொல்ல லாயக்கற்றவர்கள்

இந்த தமிழ் திரை நடிகர்கள் அரசியல் பேச , அடுத்தவனை குற்றம் சொல்ல லாயக்கற்றவர்கள் என்ற எண்ணம் உறுதிப்பட்டது.

இரண்டே உதாரணங்கள் போதும்…

முதலாவது, ஏன் GST வரியை எதிர்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, நான் GST ஐ எதிக்கவில்லை , வரியை குறைக்கத்தான் சொல்கிறேன் என்றார் கமல். இவ்வளவுதான் டிக்கெட் விலை வைக்க வேண்டும் என்று ஏன் கட்டாயப்படுத்துகிறது அரசாங்கம் , ஏன் Capping வைக்கிறது என்று கேட்கிறார்.

அதற்கு பாண்டே , சினிமா லக்ஸுரிதானே அதற்கு அதிக வரி விதித்தால் என்ன தவறு, ? பொது மக்கள் பார்க்கும் சினிமா அவர்களுக்கு நியாயமான செலவாக இருக்க வேண்டும் என்று அரசாங்கம் சொல்வதில் என்ன தவறு என்று கேட்கிறார்…

அதற்கு கமலின் பதில் : டிக்கெட் விலை அதிகம்னு நெனச்சா படம் பார்க்காதீங்க, விட்ற வேண்டியதுதானே…

நம் கேள்வி : சினிமாவுக்கு போடும் வரியை அரசாங்கம் குறைக்கலைன்னா நீ படம் எடுக்கிறதை விட்ற வேண்டியதுதானே ? டிக்கெட் விலையும் சரி, அதற்கான வரியும் சரி , பாக்கெட்டிலிருந்து கொடுக்கப் போகிறவன் ரசிகன்.. உன் இஷ்டத்திற்கு நிர்ணயிக்கும் கட்டணமே தப்பில்லை என்றால் அதற்கு விதிக்கும் வரியில் மட்டும் என்ன தப்பு ? கட்டணம் பெரிசா, வரி பெரிசா ? அதிக கட்டணத்ததைக் கொடுப்பவன் அதற்கான வரியை மட்டும் கொடுக்க மாட்டேன்னு சொன்னானா ?

இரண்டாவது உதாரணம் : பாண்டேயின் கேள்வி :
இந்த அதிமுக அரசாங்கம் போக வேண்டும் என்கிறீர்கள். இந்தக் கட்சி 5 ஆண்டுகள் ஆள வேண்டும் என்றுதானே மக்கள் வாக்களித்தார்கள், அதை திரும்பப் பெற வேண்டும் என்று கூறுகிறீர்களா ?

பதில் : ஆமாம்.

பாண்டே கேள்வி : அதிமுகவிற்கு மாற்று திமுக என்று நினைக்கிறீர்களா, இந்த அரசாங்கம் ஊழல் என்றால் அதை திமுக மாற்றும் என்று நினைக்கிறீர்களா ?

கமல் : அப்படி இருக்க வேண்டிய கட்டாயமில்லை. நாம் இருக்க வைக்க வேண்டும்.

நம் கேள்வி : திமுகவை நேர்மையாக இருக்க வைக்க முடியும் என்றால் அதிமுகவையும் இருக்க வைக்க முடியுமே ! அதற்கு ஏன் இடையில் ஆட்சி மாற வேண்டும் ?

 

மக்களே , ரஜினிக்கு அதிமுக மீது கோபம் வந்தது தன் வாகனம் போயஸ் தோட்டத்தில் வழி மறிக்கப்பட்டதால்….

கமலுக்கு கோபம் வந்தது , தன் படத்திற்கு ஜெயலலிதா கொடுத்த தொந்திரவுகளால்…

இவங்களுக்கு மக்கள் பிரச்சினைகள் கடைசி பட்சம். அப்படி மக்கள் பிரச்சனைகளும் ஊழலும்தான் இவர்கள் கோபத்திற்கு அடிப்படை காரணம் என்றால் , இந்தியாவில் இருப்பதிலேயே ஆகப்பெரிய கொள்ளைக்காரர் கருணாநிதி அடித்த கொள்ளைகளுக்கும், இந்திய தேசத்திற்கும் தமிழினத்திற்கும் செய்த துரோகங்களுக்கும் …ஏன் , கடந்த திமுக ஆட்சியில் திரையுலகையே ஆட்டிப்படைத்த கருணாநிதி குடும்பத்தின் அட்டூழியங்களுக்கும் , அதிமுக மேல் ஏற்பட்ட கோபத்தை விட பல்லாயிரம் மடங்கல்லவா கோபம் கொப்பளித்திருக்க வேண்டும்..

ஆனால் இந்த இருவரும் கருணாநிதி ஆட்சி மத்தியிலும் மாநிலத்திலும் தேசம் முழுக்க சோனியாவின் காங்கிரஸோடு சேர்ந்து சுரண்டிக் கொழுத்தபோது , கட்டுமரத்திற்கு நடந்த பாராட்டு விழாக்களில் புகழாரம் சூட்டி ஜால்ராதானே போட்டாங்ய…?

ஒரே ஒரு வார்த்தை கண்டிச்சிருப்பாங்யளா ரெண்டு பேரும் ? ஏன் கண்டிக்கவில்லை ?

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...