துணை ஜனாதிபதியாக ஆகாமல் இருந்துஇருந்தால், 2019ம் ஆண்டில் அரசியலில் இருந்து ஓய்வுபெற்று இருப்பேன்,'' என, துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப் பட்டுள்ள வெங்கையா நாயுடு கூறினார்.வெங்கையா நாயுடு பார்லிமென்ட் உள்ளேயும், வெளியேயும் பேசியஉரைகள் அடங்கியபுத்தகத்தின் தெலுங்குபதிப்பு வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. அதில் வெங்கையா நாயுடு பேசியதாவது:
துணை ஜனாதிபதி பதவிக்கு தேர்வு செய்யப்பட்டதால், நான் வலுக் கட்டாயமாக அரசியல் வாழ்க்கையை துறக்க நேரிட்டது என பலரும் தவறாக பேசுகின்றனர். ஆனால், ' 2019ல் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றபின், நான் அரசியலில் இருந்து ஓய்வுபெற்று விடுவேன்' என, என் மனைவியிடம் நான் எப்போதோ சொல்லி விட்டேன். அப்போது எனக்கு, 70 வயதாகி இருக்கும். எனவே, கொள்கைரீதியாக அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது சரியாக இருந்து இருக்கும்.
ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலைகளால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, அரசியலில் இருந்து விலகி வந்துவிட்டேன். துணை ஜனாதிபதியான பிறகு மக்களுடன் கலந்து பேசமுடியாது. அப்பதவிக்குரிய சம்பிரதாயங்கள் அதை தடுக்கும். எனினும், அதை சிறைவாழ்க்கை என்று கூறிவிட முடியாது. நான் ஏற்கனவே சிறை வாழ்க்கையை அனுபவித்தவன். நாட்டில் பிறப்பிக்கப்பட்ட அவசரநிலையால் அது நேர்ந்தது. அதற்காக நன்றிகூறி கொள்கிறேன். துணை ஜனாதிபதியான பிறகு சிலகட்டுப்பாடுகள் இருக்கத்தான் செய்யும். இருப்பினும், மக்களில் ஒருவராக இருக்க எப்படியும் ஒரு வழியை கண்டுபிடித்து விடுவேன். இனிமேல் நான் அரசியல் பேசக்கூாடது. ஆனால், நாடு மற்றும் மக்களுக்கு கவலை ஏற்படுத்தும் விஷயங்கள் குறித்து பேசமுடியும்.
நான் மத்திய அமைச்சர் பதவியை விரும்பினேன். எனவே, துணை ஜனாதிபதியாக விருப்பம் இல்லாமல் இருந்தேன் என்றெல்லாம் சிலர் கூறிவருகின்றனர். ஆனால், வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பா.ஜ., தேசிய தலைவர் பொறுப்பை ஏற்க, நான் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமாசெய்தேன் என்பதை அவர்கள் நினைத்து பார்க்க வேண்டும். நான் மீண்டும் மத்தியஅமைச்சர் பொறுப்பை ஏற்கவேண்டும் என வாஜ்பாய் கூறிய போது, அப்படி செய்தால் அது எனக்கு பதவியிறக்கமாகவே இருக்கும் என அவரிடம் தெரிவித்து இருந்தேன்.வாரிசு அரசியலை நான்கடுமையாக எதிர்க்கிறேன். எனது மகனும், மகளும் அரசியலில் நுழைய நான் ஒருபோதும் ஆதரவு தெரிவித்தது இல்லை. தத்தமது துறைகளில் கவனம் செலுத்துப்படியே அவர்களிடம் கூறினேன். நான் உயிருடன் இருக்கும்வரை அவர்கள் அரசியலில் நுழைய மாட்டார்கள். இவ்வாறு வெங்கையா பேசினார்.
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.