மாநில அரசியலில் அசாதாரண சூழ்நிலை உருவாகும்போது, சிலசமயம் சட்டசபையை சஸ்பெண்ட்செய்து முடக்கி வைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்வதுண்டு.
ஆட்சி கவிழ்க்கப் பட்டு உடனடி தேர்தல் வருவதைத்தடுக்க இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் சூழல் சீரானபிறகு சட்டசபை சஸ்பெண்ட் நீக்கப்பட்டு மீண்டும் ஆட்சிதொடர வழிவகை செய்யப்படும்.
தமிழ்நாட்டு அரசியலில் தற்போது நடந்துவரும் செயல்கள், ஆட்சி கவிழ்ப்பை நோக்கிசெல்வதால் மத்திய அரசு இதில் தலையிட்டு சட்ட சபையை முடக்கக் கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 134 பேரில் 21 பேர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகவேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கும் எம்எல்ஏ.க்கள் எண்ணிக்கை 113 ஆக குறைந் துள்ளது. சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்த போது 25 முதல் 30 எம்.எல்.ஏ.க்கள் வரை கலந்து கொள்ளவில்லை.
அவர்கள் டி.டி.வி.தினகரனின் ‘ஸ்லீப்பர்செல்’ ஆட்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து தனது நிலையை தெளிவுப்படுத்திகொள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எம்.எல்.ஏ.க்களை சந்திக்க தொடங்கியுள்ளார். டி.டி.வி. தினகரனுக்கு பதிலடிகொடுப்பதற்காக இதன் மூலம் அவர் தன்னை தயார் படுத்தி வருகிறார்.
குறிப்பாக தினகரனின் 19 எம்எல்ஏ.க்களால், மெஜாரிட்டியை இழந்துவிட்டதாக சர்ச்சை எழுந்து இருப்பதால் அதற்கு முடிவுகட்ட எடப்பாடி பழனிசாமி எம்.எல்.ஏ.க்களை சந்திப்பதாக கூறப்படுகிறது.
முதல்-அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் மற்றும் டி.டி.வி.தினகரனின் 19 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுப்பார் என்றுதெரிகிறது. அப்போது தமிழகத்தில் அரசியல் குழப்பம் ஏற்படும்.
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் சஸ்பெண்ட் செய்யப் பட்டால் தி.மு.க. கூட்டணியின் 98 எம்.எல்.ஏ.க்களும் பதவியை ராஜினாமாசெய்து பதிலடி கொடுப்பார்கள் என்று கூறப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலை எழும்பட்சத்தில் அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும்.
எடப்பாடி பழனிசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்படும்பட்சத்தில் தமிழ்நாட்டில் அடுத்த 6 மாதத்துக்குள் மீண்டும் தேர்தலை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும்.
எடப்பாடி பழனிசாமி அரசுக்கு திடீர் நெருக்கடி ஏற்பட்டால் சட்டசபையை சிறிது நாட்களுக்கு முடக்கிவைக்க வாய்ப்புண்டு .
இத்தகைய சம்பவம் சிலமாநிலங்களில் ஏற்கனவே நடந்துள்ளது. 1990-ம் ஆண்டு ராஜீவ்காந்தி உத்தரவிட்டதை ஏற்க மறுத்த கர்நாடக முதல்-மந்திரி வீரேந்திர பட்டீல் முதல்வர்பதவியில் இருந்து விலக மறுத்தார்.
இதனால் கர்நாடகா அரசியலில் குழப்பம் ஏற்பட்டது. அப்போது மத்தியஅரசு தலையிட்டு சட்டசபையை ஒரு வாரத்துக்கு முடக்கிவைத்தது. கடந்த ஆண்டு கூட அருணாசலபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் சட்டசபை செயல்பாடு சில தினங்களுக்கு முடக்கிவைக்கப்பட்டது.
அருணாசல பிரதேசத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சட்ட சபை சில வாரங்களுக்கு செயல்படாமல் முடங்கிக் கிடந்தது. உத்தரகாண்ட் மாநிலத்தில் சுமார் 1½ மாதம் சட்ட சபை முடக்கத்தில் இருந்தது.
தமிழ்நாட்டில் இதற்குமுன்பு 1976, 1980, 1988 மற்றும் 1991-ம் ஆண்டுகளில் அரசியலில் அசாதாரண சூழ்நிலை உருவாகி ஆட்சிகள்கவிழ்ந்தது. அந்த 4 தடவையும் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப் பட்டது. அப்போது சட்டசபை கலைக்கப்பட்டது.
ஆனால் இந்ததடவை சட்ட சபையை கலைக்காமல் சஸ்பெண்ட் மட்டும்செய்து சிலநாட்கள் முடக்கி வைத்து விட்டு, மீண்டும் சட்டசபைக்கு உயிர்கொடுக்கும் திட்டத்துடன் உள்ளனர். இந்ததிட்டப்படி சட்டசபை சஸ்பெண்ட் செய்யப்பட்டால், தமிழக அரசியல் வரலாற்றில் இது தான் சட்டசபையின் முதல் சஸ்பெண்ட் நடவடிக்கையாக இருக்கும்.
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.