ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனித்து போட்டி

ஒடிஸாவில் வரும் 2019ஆம் ஆண்டு நடக்க விருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என்று பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.


மூன்று நாள் பயணமாக ஒடிஸா வந்திருக்கும் அவர், புவனே சுவரத்தில் செய்தியாளர்களை வியாழக்கிழமை சந்தித்தார். அவர் கூறியதாவது:


ஒடிஸா மாநிலத்துக்கென கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 3.95 லட்சம்கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இருந்தும் ஒடிஸாவின் வளர்ச்சியில் பெரிதாக மாற்றம் எதையும் காணமுடியவில்லை.


சில திட்டங்களை பிஜு ஜனதாதள அரசு செயல்படுத்த தவறியதும் மத்திய அரசுடன் ஒத்துழைக் காததால் வேறு பல திட்டங்கள் முடங்கிப்போனதும் தான் காரணம்.


விளம்பரம் மூலம் தன்னைத்தானே முன்னிலைப்படுத்திக்கொள்வதில் நவீன் பட்நாயக் கில்லாடி. மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட திட்டங்களை செயல் படுத்துவதில் மோடி அரசுக்கு கொஞ்சம்கூட நவீன் பட்நாயக் அரசு ஒத்துழைப்பு தருவதில்லை. 


ஒடிஸாவில் சுரங்கக்கனிமங்களை வெட்டியெடுத்ததில் நடந்திருக்கும் மோசடிதான் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ஊழல்களில் ஒன்று. இயற்கை வளங்களை சுரண்டியதைத் தடுக்கத் தவறியதற்காக ஒடிஸா அரசை மிகக்கடுமையாக உச்ச நீதிமன்றம் விமர்சனம் செய்திருக்கிறது.


ஒடிஸாவில் நடந்திருக்கும் சீட்டுநிதி மோசடியால் கோடிக்கணக்கான சிறு முதலீட்டாளர்கள் பாதிப்படைந் துள்ளனர். மோசடியில் ஈடுபட்டோர் ஆளுங்கட்சிக்கு நெருக்க மானவர்கள் என்பதால் இந்த மோசடியைத் தடுக்க நவீன் பட்நாயக் அரசு எதையும் செய்ய வில்லை.


சீட்டு நிதிமோசடியை எந்தவித நெருக்குதலும் இன்றி சுயேச்சையாக சிபிஐ விசாரித்துவருகிறது. மோசடியில் ஈடுபட்டோர் சமூகத்தில் எந்த அந்தஸ்தில் இருந்தாலும் அல்லது ஆளுங் கட்சியுடன் தொடர்புடை யவர்களாக இருப்பினும் அவர்களை விடமாட்டோம்.


மகாநதி நீர்ப்பங்கீட்டுப் பிரச்னைக்கு தீர்வுகாணும் நோக்கில் நடுவர் மன்றம் அமைக்கும் பணி நடந்துவருகிறது. நரேந்திர மோடி ஆட்சியின் கீழ் ஒடிஸாவுக்குச் சொந்தமான ஒரு லிட்டர் தண்ணீரைக் கூட அடுத்தவர் எடுக்க அனுமதிக்க மாட்டோம். ஒடிஸா சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக தனித்துப்போட்டியிடும். வேறு எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டோம் என்றார் அமித்ஷா

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...