திருச்சியில் பாஜக.,வின் நீட் ஆதரவு பொதுக்கூட்டம், திமுக உள்ளிட்ட எட்டு கட்சிகளின் நீட் எதிர்ப்பு கூட்டத்துக்கு, ஒட்டுமொத்த தனியார் மருத்துவக் கல்லூரிகளின் பணப்பலத்துக்கு சரியான பதிலடியை தந்துள்ளது.
திருச்சியில் நீட் எதிர்ப்பு கூட்டத்தை, மருத்துவக் கனவுடன் சரியான வழிகாட்டுதல் இல்லாமல், திமுகவின் சதிவலையில் சிக்கி, தூக்கில் தொங்கிய அனிதாவின் மரணத்தின் மீது திமுக நடத்தியது, அதுவும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட எட்டு கட்சிகளின் மெகா கூட்டணியுடன்.
கூட்டணி கட்சிகளின் எண்ணிக்கைதான் அதிகமாக இருந்ததே தவிர, எதிர்பார்த்த கூட்டங்கள் திரளவில்லை. நீட்டுக்காக நீலக்கண்ணீர் வடிப்பதைப் போன்று ஏமாற்றித் திரிந்தவர்கள், காற்றடித்த நாற்காலிகளை பார்த்துதான் உண்மையில் நீலக்கண்ணீர் வடித்தனர்.
மறுநாள் பாஜக.,வின் நீட் ஆதரவு கூட்டத்தைக் கண்டு கதறிக் கொண்டிருக்கின்றனர். கூட்டம் ஆரம்பிக்கும் முன்பாக 5ந்து மணிக்கு எடுத்த படத்தையும், கூட்டம் முடியும் தருவாயில் 10 மணிவாக்கில் எடுத்த படத்தையும் சமூக ஊடகங்களில் தவழவிட்டும் கூட்டமே கூடவில்லை என்று பொய்யுரைத்து மனதைதேற்றியும் வருகின்றனர்.
இவர்கள் வடக்கே ஊழல் மாபியா லல்லுவின் மெகாகூட்டணியின் உயிர் தோழர்கள் ஆச்சே, இவர்கள் இப்படிதான் செய்வார்கள். சமீபத்தில் லல்லு பிரசாத் பீகாரின் பாட்னாவில் “பாஜகவை விரட்டுவோம், நாட்டை காப்போம்” என்ற முழக்கத்துடன் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி உள்ளிட்டவர்களை எல்லாம் அழைத்து மெகா பொதுக் கூட்டத்தை நடத்தினார். 30 லட்சம் பேர் கலந்துகொண்டதாக அழும்பு கொடுத்தார். மைதானமே நிரம்பி வழிவதை போன்று படங்களை எல்லாம் வெளியிட்டு மகிழ்ந்தார்.
பின்புதான் தெரிந்தது லாலு வெளியிட்ட படங்கள் திருத்தப்பட்டது என்று. அதை ஏ.என்.ஐ., செய்தி நிறுவனம் வெளியிட்ட படம் உறுதி செய்தது. இறுதியில் அசிங்கப்பட்டு போனார். எனவே கூடாத கூட்டத்தை கூட்டிக் காட்டுவதிலும், கூடிய கூட்டத்தை குறைத்து காட்டுவதிலும் வல்லவர்கள். இவர்கள்
ஆனால் பாஜக கூட்டிய கூட்டமும், சூழ்நிலையும் அசாதரமானது. ஒரு சில நாட்களில் நீட் ஆதரவு கூட்டத்துக்கு ஏற்ப்பாடு செய்யப்பட்டது. காலையில் இருந்தே மழை மேகம் பரவலாக எங்கும் சூழ்ந்து மழை பொழிந்தது. கூட்டம் ரத்து செய்யப்பட்டு விடுமோ என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால் பின்புதான் தெரிந்தது இந்த மழை கூட்டத்தை கலைப்பதற்கு அல்ல. முந்தைய நாள் எதிர்கட்சிகள் கூடிய கலங்கம் நிறைந்த இடத்தை சுத்தம் செய்ய என்று.
இயற்கையையும் மீறி ஆறு மணிக்கு எல்லாம் கூட்டம் நிரம்ப தொடங்கியது. எட்டு கட்சிகளின் கூட்டத்துக்கு நிகராக, பாஜக தனி ஒரு கட்சியாக கூட்டத்தை திரட்டி காட்டியது. இது ஒரு முத்திரை.
பிரதமர் வேட்ப்பாளராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், 2014 ம் ஆண்டு திருச்சியில் நரேந்திர மோடி கலந்து கொண்ட பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்து அதிக எம்.பி.,க்களை பாஜக.,வுக்கு தராவிட்டாலும் அகில இந்திய மக்களின் மனோநிலையை அவர்கள் பிரதிபலித்தனர்.
அதே போன்று திருச்சியில் பாஜக திரட்டிய கூட்டம் அருகில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் இருந்து திரண்ட கூட்டமாக இருந்தாலும், அது ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனோ நிலையை பிரதி பலிப்பதாகவே உள்ளது. தமிழகத்தில் பாஜக வலுப்பெற்று வருகிறது. எனவேதான் பாஜக.,வுக்கு எதிராக மெகா கூட்டணிகள் தமிழகத்திலும் திரளுகின்றன. பாஜக.வுக்கு கூடும் கூட்டத்தை குறைத்து காட்ட முயற்சிக்கின்றன. அனைத்து காட்சிகளும் எந்நேரமும் பாஜக.,வை நோக்கியே தங்கள் விமர்சனங்களை வைத்து வருகின்றன. தமிழக பாஜக ஆளே இல்லாத டீ கடை என்று விமர்சித்துக் கொண்டே அதைக்கண்டு நடுங்கித்தான் வருகின்றனர்.
தமிழ்த் தாமரை VM வெங்கடேஷ்
புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம். |
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.