வக்கிரமான பொருளாதார விவாதம் மோடியை குறை கூறுகிறது

நோட்டுத் தடை, கடந்தகால வக்கிர பொருளாதாரப் போக்கைச் சரி செய்ய எடுத்த நடவடிக்கை.அதனால் ஜி.டி.பி. வளர்ச்சி குறுகிய காலத்துக்குக் குறையும் என்று வெளிப்படையாகக் கூறாமல், வளர்ச்சிக் குறையாது என்று மோடி அரசு பாசாங்கு செய்ததால்தான், இன்று நோட்டுத் தடையால் வளர்ச்சி குறைந்து விட்டது என்ற கூச்சல் எழுந்திருக்கிறது.

நமது பொருளாதார நிபுணர்கள் இப்படிப் பேசும்போது, வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் தலைவர்கள், ‘நாங்கள் காலாண்டு வளர்ச்சிக் கணக்கையோ, குறுகிய கால அடிப்படை நோக்கத்திலேயோ இந்தியாவை பார்ப்பதில்லை. இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. அதனால் இங்கு முதலீடு செய்கிறோம்’ என்று கூறுகிறார்கள்.

அதன் காரணமாக 2013 – 14 – ல் 36 பில்லியன் டாலராக இருந்த அந்நிய முதலீடு, 2016 – 17 – ல் 60 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது. அதனால் ஐ.மு.கூ. ஆட்சிக் காலத்தில் 300 பில்லியன் டாலராக இருந்த அந்நியச் செலாவணி கையிருப்பு, இப்போது 400 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது.

தவிர மேலே கூறியபடி, முத்ரா நிதி காரணமாக சுய வேலைவாய்ப்பு 1.7 கோடி அதிகமாகி இருக்கிறது;ரூபாய் 1.75 லட்சம் கோடி மான்யங்கள் மக்களுக்கு நேரடியாக வங்கியில் போடப்பட்டிருக்கிறது;

ஒரு கோடிக்கும் மேல் வறுமைக் கோட்டிலிருக்கும் குடும்பங்களுக்கு இலவச கேஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது; தற்காலத்தில் பிரச்னைகள் வந்தாலும், பிறகு பெரும் நன்மை பயக்கக்கூடிய ஜி.எஸ்.டி. அமலாகி இருக்கிறது. நோட்டுத் தடை, ஜி.எஸ்.டி. இரண்டையும் நடைமுறைப்படுத்துவதில் தவறுகள் இருந்தாலும், அதனால் தற்பொழுது சிரமங்கள் வந்தாலும், அவை நாட்டை பெருமளவுக்கு முன்னுக்குக் கொண்டு வரும் நடவடிக்கைகள் என்பதை யாரும் தர்க்க ரீதியாக மறுக்க முடியாது.

நாட்டின் தொடர்ந்து கொண்டிருக்கும் வளர்ச்சிக்கு இவை எல்லாம் அஸ்திவாரங்கள். நாட்டு நலனில் அக்கறையுள்ள மோடி போன்ற ஒரு உறுதியான தலைவரால்தான் இதைச் செய்ய முடியும் என்பது நம்முடைய கருத்து.

இதனால் மோடியை எதிரியாகக் கருதுபவர்கள் உண்மைக்குப் புறம்பாகப் பேசுவதால், குறுகிய காலத்திற்கு நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முடியுமே தவிர, நிரந்தரமாக உண்மைகளை மறைக்க முடியாது.

யாராவது ஒரு தலைவர் ஐ.மு.கூ. அரசு செய்த தவறுகளிலிருந்து, நம் நாட்டுப் பொருளாதாரத்தை மீட்டு வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியும் என்றால், அது மோடியாகத்தான் இருக்க முடியும்.

அதற்குத் தேவையான கடினமான முடிவுகளை அவர் எடுத்தும் வருகிறார்.

வக்கிரமான பொருளாதார விவாதம், இந்த உண்மைகளை மறைக்கிறது என்பதே உண்மை.

நன்றி துக்ளக்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...