கடந்த ஜூலை 1-ந் தேதி, நாடுமுழுவதும் சரக்கு மற்றும் சேவைவரி (ஜி.எஸ்.டி.) அமலுக்கு வந்தது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் செய்யவேண்டிய மாற்றங்கள் குறித்து முடிவு செய்வதற்காக, மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி தலைமையில் அமைக்கப்பட்ட மாநில நிதி மந்திரிகள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சிலின் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், நகை வாங்குபவர்களுக்கான கட்டுப்பாட்டை நீக்க முடிவுசெய்யப்பட்டது. ரூ.50 ஆயிரத்துக்கு மேல் நகை வாங்குவதற்கு பான் எண், ஆதார் எண் போன்றவற்றை தெரிவிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு உருவாக்கி இருந்தது. இந்நிலையில், இந்த கட்டுப்பாடுநீக்கப்பட்டது. அதனால், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் நகை வாங்குபவர்கள், இனிமேல் பான் எண்ணை தெரிவிக்கவேண்டியது இல்லை. அவர்களைப் பற்றிய விவரங்களை நகை வியாபாரிகள், நிதிபுலனாய்வு பிரிவுக்கு அளிக்க வேண்டியதும் இல்லை.
இதுபோல், ரூ.2 கோடிக்குமேல் வர்த்தகம் செய்யும் நகை வியாபாரிகளை சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கொண்டு வருவது தொடர்பான அறிவிக்கையையும் மத்திய அரசு வாபஸ்பெற்றது. ஒன்றரை கோடி ரூபாய்வரை வர்த்தகம் செய்யும் சிறு, குறு நிறுவனங்கள் 3 மாதங்களுக்கு ஒரு முறை கணக்கு தாக்கல் செய்தால் போதும் என முடிவு எடுக்கப்பட்டது.
ரூ.75 லட்சம் வரை வர்த்தகம் செய்யும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மட்டுமே ‘காம்போசிசன்’ திட்டத்தின் கீழ் வரிசெலுத்த முடியும் என்ற நிலை இருந்தது. இந்நிலையில், ரூ.1 கோடி வரை வர்த்தகம் செய்யும் சிறு, நடுத்தர நிறுவனங்களும் ‘காம்போசிசன்’ திட்டத்தில் வரி செலுத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
இத்திட்டத்தில் நடைமுறை சிக்கல் இல்லாமல், 1 முதல் 5 சதவீத வரி மட்டும் செலுத்தினால்போதும். பரவலாக பயன்படுத்தப்படும் 27 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியும் குறைக்கப்பட்டதாக அருண் ஜெட்லி தெரிவித்தார்.
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.