கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி அமைந்த திலிருந்து அங்கு ஏராளமான பாஜக, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்தக்கொலைகள், மிகவும் கொடூரமான முறையில் அரங்கேற்றப் படுகின்றன. சில சமயங்களில், பாஜகவினர் கொல்லப்பட்டு அவர்களின் உடல்கள் சிதைக்கப் படுகின்றன.
பாஜகவை ஆதரிப்பவர்களை அச்சுறுத்துவதற்காகவே இதுபோன்ற செயல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அவர்களின் எண்ணம் ஒரு போதும் ஈடேறாது. அவர்கள் பாஜகவுக்கு எதிராக எந்தளவுக்கு வன்முறைகளை அரங்கேற்று கிறார்களோ, அதைவிட வேகமாக கேரளத்தில் பாஜக வேரூன்றும். எந்த விதமான அச்சுறுத்தலும் பாஜகவை தடுத்து நிறுத்தாது என்பதை உறுதியுடன் கூறிக்கொள்கிறேன்.
கேரளத்தில் நடைபெற்றுவரும் இந்தக் கொலைகள் யாவும், முதல்வர் பினராயி விஜயனின் ஆசியுடனேயே நடைபெறுகின்றன. எனவேதான், கொலையாளிகள்மீது போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால், பினராயி விஜயனின் சொந்த ஊரில் தான் அதிக எண்ணிக்கையிலான பாஜகவினர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
வன்முறை அரசியல் என்பது இடதுசாரிகளுக்கு ஒன்றும் புதிதல்ல. அது, அவர்களின் இயல்பிலேயே கலந்துள்ள கொள்கையாகும். நாட்டிலேயே மேற்குவங்கம், திரிபுரா, கேரளம் ஆகிய மாநிலங்களில்தான் அரசியல் வன்முறை அதிக அளவில் நடைபெற்றுள்ளது. இது, தற்செயலானதல்ல. ஏனெனில், மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் நீண்டகாலமாக இடதுசாரிகளின் ஆட்சிதான் நடைபெற்றிருக்கிறது.
எந்த மாநிலங்களில் எல்லாம் அவர்கள் (இடதுசாரிகள்) ஆட்சியில் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் வன்முறைச் சம்பவங்கள் தலை விரித்தாடுவது வழக்கம். நம் நாட்டில், சிலர் (மனித உரிமை அமைப்புகள்) எதற்கெடுத்தாலும் மனித உரிமைபற்றி பேசுவர்; போராட்டம் நடத்துவர். ஆனால், கேரளத்தில் இத்தனைபேர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதை எதிர்த்து அவர்கள் ஏன்போராட்டம் நடத்தவில்லை? இதிலிருந்தே, அவர்களின் ஒரு கட்சி சார்பு நிலை தெளிவாகிறது என்றார் அமித்ஷா.
கேரள மார்க்சிஸ்ட் அரசைக்கண்டித்து தில்லியில் பாஜக சார்பில் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடைபெற்றது. தில்லியின் கனோட் பகுதியிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் தலைமையகம் அமைந்திருக்கும் கோல் மார்க்கெட் பகுதிவரை இந்தப் பேரணி சென்றது. இப்பேரணிக்கு தலைமை வகித்து அமித் ஷா பேசியது:
வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ... |
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |
Leave a Reply
You must be logged in to post a comment.