தமிழகத்தில் டெங்குவால் அசாதாரண சூழ்நிலை உருவாகிஉள்ளது, சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது என தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார். தூத்துக்குடி, வாகைக்குளம் விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருகிறது.
இளைஞர்களின் ஆதரவோடு அரசியல் அங்கீகாரம்பெற்று வருகிறது. பாஜ வலியுறுத்தலின் பேரிலேயே தமிழகத்தில் டெங்குகாய்ச்சல், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுதிட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. தமிழக அரசு டெங்கு காய்ச்சல் தொடர்பாக மத்திய அரசிடம் எதுவும் கேட்கவில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. தமிழகத்தில் டெங்கு அசாதாரண சூழ்நிலையை உருவாக்கிஉள்ளது. ஆனால், இதில் தனியார் மருத்துவமனை, சமூக ஆர்வலர்கள் பங்களிப்புஇல்லை.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது கேள்விக் குறியாக உள்ளது. முதல்வருக்கு உட்கட்சி பிரச்னையால், மக்கள்பிரச்னை மீது கவன சிதறல் ஏற்படுகிறது. எனவே, முதல்வர் சுகாதாரம், சட்டம் ஒழுங்கு, வறட்சி உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து மேற்ப்பார்வையிட்டு மக்கள்பக்கம் கவனத்தை திருப்பவேண்டும். அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரிபேசுவதை முதல்வர் கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.