ஒரு இந்திய சுற்றுலா பயணி
சான்ஃப்ரான்சிஸ்கோ-வில் ஷாப்பிங்க் சென்றான்.
அங்குள்ள ஒரு கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த வெண்கலத்தினால் செய்ய்யப்பட்டிருந்த எலி அவனை மிக மிக கவர்ந்தது.
அதனை வாங்கும் நோக்கத்துடன் எடுத்துப் பார்த்தபோது,
அதன் மீது மட்டும் price tag இல்லை.
கடைக்காரரிடம் அதன் விலை கேட்டபோது
அவர், "எலி 12 டாலர்கள், அதற்குரிய கதை 100டாலர்கள்", என்றார்.
12 டாலர்களைக் கொடுத்து," எனக்கு இந்த எலி மட்டும் போதும்!
கதை வேண்டாம்" என சொல்லி விட்டு எலியை எடுத்துச் சென்றான்.
சற்று தூரம் சென்ற பின்,
தன் பின்னால் சில நிஜ எலிகள் வருவதைப் பார்த்தான்.
கலக்கத்துடன் சற்று வேகமாகச் சென்றான்.
மேலும் இன்னும் பல எலிகள் தொடர்ந்தன….
இன்னும் மிக வேகமாகச் சென்றான்….
சற்று நேரத்துக்குள்,
நூறாகி……..
ஆயிரக்கணக்காகி……
லட்சக்கணக்கில்……………அவனைத் தொடர்ந்தன
இதனைக் கண்டு பயந்து நடுங்கி….ஓடஆரம்பித்தான்…..
கடலை நோக்கி ஓடிப்போய்……
கையிலிருந்த வெண்கல எலியைத் தூக்கி
கடலுக்குள் வீசி எறிந்து விட்டான்…
என்ன ஆச்சர்யம்?!…
அனைத்து எலிகளும் கடலுக்குள் சென்று விழுந்து விட்டன….
இதனைக் கண்டு மிகுந்த நிம்மதிப் பெருமூச்சு விட்டவாறு
வெண்கல எலியை வாங்கிய கடைக்குச் சென்றான்.
இப்போது அவனைக் கண்ட அந்த கடைக் காரர்..
.."என்ன …இப்போது கதை வேண்டுமா?", என நக்கலாகக் கேட்டார்.
அதற்கு அந்த சுற்றுலா பயணி, என்ன பதில் கூறியிருப்பார்?…..
சற்று நீங்கள் யோசித்து பாருங்கள்……
..
..
..
..
..
..
..
….
..
..
..
..
..
..
"இல்லை…..இல்லை"
…
…
…
..
..
.
அந்த வெண்கல எலி சிலையைப் போல்……இப்போதுள்ள இந்திய அரசியல்வாதிகளில் ஒருவர் (மோசமாக ஊழல்கள் செய்து வந்துள்ளவரின்) பெயரைக் குறிப்பிட்டு, அவரின் சிலை இருக்கின்றதாவெனக் கடைக்காரரிடம் கேட்டான்!..…..
நன்றி திருநாவுக்கரர்சு திருச்செங்கோடு
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |
ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ... |
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.