போகிற போக்கில் உங்கள் விருப்பத்துக்கு கருத்துகளைச் சொல்லிவிட்டுப்போகக் கூடாது : தமிழிசை சௌந்தர்ராஜன்

அண்மை காலமாக மத்திய அரசு க்கு எதிரான கருத்து களைத் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்கள் வெளிப் படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மத்திய அரசுக்கு எதிராக நடிகர் கமல் பல்வேறு கருத்து களை வெளி யிட்டிருந்தார். இந்த நிலையில் அவரைத் தொடர்ந்து ‘மெர்சல்’ மூலம் நடிகர் விஜய் யும் மத்திய அரசுக்கு எதிராகக் கருத்து களை வெளியிடத் தொடங்கி விட்டார்.

அந்தத் திரைப் படத்தில், மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி முறையையும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தைப் பற்றியும் கேலி செய்து வசனம் பேசி யுள்ளார். ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை குறித்து ஏற்கெனவே கமல் உள்ளிட்ட நடிகர்கள் எதிர்ப்புத் தெரிவித் திருந்த நிலையில், தற்போது மெர்சல் திரைப் படத்திலும் எதிர்ப்பு வசனங்களை வைத் திருப்பது அரசியல் களத்தை உற்று நோக்க வைத்துள்ளது. மத்திய அரசு மீதான விஜய் யின் இந்த எதிர்ப்பு நிலைப்பாடு குறித்து பி.ஜே.பி தரப்பில் கண்டனக் குரல்கள் எழுந் துள்ளன. இது குறித்து பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனிடம் பேசிய போது, ‘விஜய் நடித்துள்ள மெர்சல் திரை ப்படத்தில் மத்திய அரசுக்கு எதிரான வசனங்கள் பதிவு செய்திருப்பது கண்டனத் துக்குரியது. ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையில் உண்மைத் தன்மையை மறைத்து மக்கள் மனதில் மாற்றுக் கருத்துகளைப் பதிய வைக்கக் கூடாது.

போகிற போக்கில் உங்கள் விருப்பத்துக்கு கருத்துகளைச் சொல்லிவிட்டுப்போகக் கூடாது. அவ்வாறு நீங்கள் சொல்கிற அனைத்துக் கருத்தையும் ஏற்றுக் கொண்டு பி.ஜே.பி அமைதி காக்கும் என்றும் நினைக்க வேண்டாம். இவர்கள் ஒன்றும் நேற்றோ, இன்றோ அறிமுக மானவர்கள் அல்ல. 50 ஆண்டு காலமாகக் களத்தில் இருக்கக் கூடியவர்கள். பல ஊழல் களையும் மிகப் பெரிய மக்கள் பிரச்னை களையும் இந்த நாடு சந்தித் துள்ளது. அப்போது எல்லாம் கருத்துச் சொல்லாத வர்கள். தற்போது பி.ஜே.பி-யைக் குறை சொல்லி விளம்பரம் தேட முயற்சி செய்கிறார்கள். அதுதான் உண்மை. மத்திய அரசு கொடுங்கோல் ஆட்சி செய்வது போன்ற தொரு நிலையை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். அப்படித் தவறான கருத்து களை மக்கள் மனதில் பதிவு செய்வதற்கு பி.ஜே.பி என்றும் அனுமதிக்காது” என்றார்

‘விஸ்வரூபம்’ படத்தில் கருத்துச் சுதந்திர த்துக்கு உரிமை யில்லையா? சோனியா காந்தி குறித்து தவறான கருத்தை வெளியிட் டார்கள் என்ப தற்காக காங்கிரஸ் கட்சி யைச் சேர்ந்த தொண்டர்கள் போராட்டம் நடத்த வில்லையா? இதில் எல்லாம் எங்கே போனது கருத்துச் சுதந்திரம்?

இந்த நாட்டை சரியான பாதையில் வழி நடத்த வேண்டும் என்ப தற்காக திட்டங் களைச் செயல் படுத்தும் போது தவறான கருத்து களைச் சொல்லி அந்தத் திட்டத்தைச் சிதைக்கும் செயலை அனுமதிக்க முடியாது.’’இவ்வாறு அவர் கூறினார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மோடி – டிரம்ப் தொலை பேசி உரையா ...

மோடி – டிரம்ப் தொலை பேசி உரையாடல் பிரதமா் நரேந்திரமோடியும், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் தொலைபேசி ...

காப்பீட்டுத் துறையில் 100% அன்னிய ...

காப்பீட்டுத் துறையில் 100% அன்னிய முதலீடு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ...

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை.. பதவ ...

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை.. பதவி நீக்கம் செய்ய முடியுமா? திமுகவின் மாஸ்டர் பிளான் திருப்பரங்குன்றம் மலையில், சிக்கந்தர் தர்காவை ஒட்டியுள்ள பகுதியில் உள்ள ...

தவறு இண்டிகோவிடம் தான் உள்ளது

தவறு இண்டிகோவிடம் தான் உள்ளது தவறு இண்டிகோவிடம்தான் உள்ளது என்றும், விரைவில் நிலைமை சீராகிவிடும், ...

இந்தியாவுக்கு மோடி பிரதமராகக் ...

இந்தியாவுக்கு மோடி பிரதமராகக் கிடைத்தது அடித்த அதிர்ஷ்டமே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , பிரதமர் நரேந்திரமோடியின் ...

மருத்துவ செய்திகள்

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...