பிரதமர் மோடியின் கருப்பு பண ஒழிப்பு, டிஜிட்டல் இந்தியா, ஜி.எஸ்.டி உள்ளிட்ட சாமானியனுக்கு பயன் அளிக்கக்கூடிய வளர்ச்சி திட்டங்களால் தங்களுக்கு ஏற்ப்பட்டுள்ள பெரும் பாதிப்புகளை மெர்சல் திரைப்படத்தின் வாயிலாக வசனம் பேசி உண்மையில் கருப்பு பண, ஹவாலா கூட்டத்தின் தளபதியாக தங்களை அடையாளப் படுத்திக் கொண்டுள்ளனர் அதன் இயக்குனர் அட்லீயும் , நடிகர் தளபதி விஜய்யும்.
"சிங்கப்பூரில் 7 சதவீதம்தான் ஜி.எஸ்.டி. ஆனால், இங்க 28 சதவீதம் ஜி.எஸ்.டி "
'எங்க ஊரில் பணமேயில்லை, எல்லாம் டிஜிட்டல்தான். ஒரே கியூதான்', 'என்ன ஐநூறு ரூபாயும் செல்லாதுன்னு சொல்லிட்டாங்களா'
இவை எல்லாம் அந்த படத்தில் வரும் முக்கிய வசனங்கள். ஒரு அரசின் ஊழலை குறைக்கூறலாம், மோசமான ஆட்சியாளர்களை நக்கல் செய்யாலாம், ஆனால் சாமானியனுக்கு பலன் தரக்கூடிய அரசின் வளர்ச்சி திட்டங்களை ஆராயாமல் குறைக்கூறுவது, இவர்களது வேஷத்தை நம்பி பாலபிசேகம் வரை செய்யும் ஒன்றும் அறியாத ரசிகர்களை குழப்புவது ஒரு வகையில் தேசத் துரோகமும் கூட .
சிங்கப்பூரில் 7 சதவீதம் ஜி.எஸ்.டி. இருக்கலாம், அங்கு இலவசத்துக்கு அலைபவர்களோ!!, லஞ்சம் கொடுப்பவர்களோ!!, தேர்தலில் 500, 1000 ரூபாய்க்கு ஓட்டுப்போடும் அறிவிலிகளோ!!!, கூத்தாடிகளின் உண்மை வேஷத்தை பகுத்தறியாமல் நிஜ தலைவர்களாக தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடும் ஏமாளி ரசிகனோ!!!!, கிடையாது.
அங்கு அரசின் வளர்ச்சி திட்டங்களை எதிர்த்து மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுதினலோ!!, வரி ஏய்ப்பு செய்தாலோ!!! கடும் தண்டனைக்கு உரியது. கடமையை செய்யாமல் உரிமையை மட்டும் செய்யும் கூட்டமும் அங்கு கிடையாது. இதை எல்லாம் அந்த படத்தில் காட்டியிருக்கலாம்.
விஜய் போன்ற நடிகர்கள் கோடிக், கோடியாக வாங்கும் சம்பளம் போதாது என்று , மேலும் பல கோடிகளை அள்ளித்தரும் பட வினியோகத்துக்கான வெளிநாட்டு உரிமங்களையும் தட்டிப் பறித்துக் கொள்கிறார்கள். மலையாளத்து நடிகர்களை போன்று நியாயமான சம்பளம் வாங்குவதில்லை. ஒரு படத்தின் மொத்த செலவில் பாதி இவர்களுக்கான சம்பளமாகவே பொய் விடுகிறது. அவை ரூ 500, ரூ 1000ம் என டிக்கட் வடிவில் ரசிகர்களிடம் இருந்து வசூளிக்கப்பட்டும் விடுகிறது.
இவ்வளவு தத்துவம் பேசும் இந்த தனி மனிதருக்கு தன்னை வளப்படுத்திக் கொள்ள எத்தனை கோடிகள் தேவைப்படுகிறது. ஆனால் ஒரு தேசம் தன் மக்களை வளப்படுத்த, ஏழைகளுக்கும் பாதுகாப்பான சுகாதாரம், மருத்துவம், கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களை கிடைக்கச் செய்ய எத்தனை, எத்தனை கோடிகள் தேவைப்படும். அதை வரிகள் மூலமாகதானே பெற முடியும்?. ஜிஎஸ்டி போன்ற முறைப்படுத்த பட்ட வரிமுரைகளே இதற்கு நிரந்தர தீர்வும் கூட..
டிஜிட்டல் பணப் பரிமாற்றம், உயர் 1000, 500 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றது போன்றவை திரைப்படத் துறையில் இருந்த ஹவாலாக்களை ஒழித்திருக்கிறதே. பேருக்கு சில லட்சங்களில் படம் எடுப்பது, அதற்கு பல கோடிகளில் கணக்கு காட்டுவது. இறுதியில் படத்தை வெளியிடாமல், வெளிநாடுகளில் இருந்து கோடிகளை மட்டும் வெள்ளையாக கொண்டு வரும் ஹவாலா முறை ஒழிக்கப் பட்டுள்ளதே?. இதேல்லாம் தளபதிக்கு தெரியாதா?.
உண்மையில் மெர்சல் திரைப்படத்தின் வாயிலாக கருப்பு பண, ஹவாலா கூட்டத்தின் தளபதியாக உருவெடுத்துள்ளார் ஜோசப் விஜய் அவ்வளவே!
தமிழ் தாமரை VM வெங்கடேஸ்
You must be logged in to post a comment.
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |
இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ... |
See..dont roiter urself as bjp guideline u.. Better fuckoff and leave..