ஒருமுறை சர்தார் வல்லபாய் படேல், ஒரு பிரெஞ்சுக்காரனையும் ஓர் ஆங்கிலேயனையும் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் இருவரும் வல்லபாய் படேல் ஓர் இந்தியர் என்பதைத் தெரிந்து கொண்டார்கள். பிறகு அவர்கள் தங்கள் நாட்டில் பெருமைகளை ஒரேயடியாக அளந்து விட்டார்கள்.
அவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த வல்லபாய் படேல், எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தார். அதனால்
வெட்கமடைந்த அவர்கள் வேறு மாதிரியாக பேச ஆரம்பித்தார்கள்.
பிரெஞ்சுக்காரன், "நான் பிரெஞ்சுக்காரனாகப் பிறந்திருக்காவிட்டால் நிச்சயம் ஆங்கிலேயனாகப் பிறந்திருப்பேன்" என்றான். ஆங்கிலேயன், "நான் ஆங்கிலேயனாகப் பிறந்திருக்காவிட்டால் பிரெஞ்சுக்காரனாகத்தான் பிறந்திருப்பேன்" என்றான்.
அப்போதும் பேசாமல் இருந்தார் வல்லபாய் படேல், அதைப் பார்த்து எரிச்சலடைந்த பிரெஞ்சுக்காரன், "நாங்கள் இருவரும் மாறி மாறிப் பேசிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் எதுவும் பேசாமல் இருக்கிறீர்களே! என்றான்.
"பேசத்தானே வேண்டும்? பேசுகிறேன். ஒரு வேளை நான் இந்தியனாகப் பிறந்திருக்காவிட்டால் அதற்காக வெட்கித் தலைகுனிந்திருப்பேன்" என்று கூறி அவர்கள் வாயை அடைத்ததோடு, தன் நாட்டுப் பற்றையும் படேல் கம்பீரமாக வெளிப்படுத்தினார்.
– நெ. ராமன்
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.