காலித்தனம் செய்பவர்களுக்கு நம் கலாச்சாரம் கசக்கத்தான் செய்யும்

இந்துத் தீவிரவாதம் இல்லை என்று இனி யாரும் சொல்ல முடியாது, கலாசாரம், பண்டிகை, இறை வழிபாடு, இசை, கலை என்று பல வழிகளிலும் பழமையைப் பரப்ப முற்படுகின்றனர்.. சமூகச் சீர்திருத்தத்திற்கு முன்னுதாரணமாய் கேரளம் திகழ்கிறது. என்றெல்லாம் பிதற்றியுள்ளார், அரசியலில் குதித்து அடிபட்டு செல்வதற்கு நாள் பார்த்துக்கொண்டு இருக்கும் நடிகர் கமல்ஹாசன்.

இன்று தமிழகத்தில் அரசியல் செய்ய வேண்டும் என்றால் பெரும் பன்மை இந்துக்களை பழிக்க வேண்டும், அவர்களது மத வழிபாட்டு முறைகளை பகுத்தறிவு என்ற போர்வையில் தூற்ற வேண்டும், தமிழின் பெருமை, ஹிந்தி எதிர்ப்பு, கூடவே கொஞ்சம் இந்திய எதிர்ப்பு என்று  இதையெல்லாம் சரியாக செய்தால் 2 சதவித வாக்குகளாவது நிச்சயம். இதைத்தான் இப்போது செய்கிறார்.

இந்துத் தீவிரவாதம் பரவி விட்டது என்கிறார், இவ்வளவு காலங்கள் அமைதியாக இருந்த இந்துக்களில் சிலர் இன்று உணர்ச்சிவசப் படுகிறார்கள், கேள்விகளை கேட்கிறார்கள் அது இவர்களுக்கு தீவிரவாதமாக தெரிகிறது. ஆனால் நைஜீரியாவில் ஒரு குண்டு வெடிப்பில் 400 க்கும் அதிகமான அப்பாவிகளை பரலோகம் அனுப்பிய காட்டுமிராண்டி தனத்தை, உலகின் ஏதோ ஒரு மூலையில் மதத்தின் பெயரால் தினம் தினம் நடைபெறும் பயங்கரவாத செயல்களை என்னவென்று அழைப்பார்?. சமீபத்தில் அமர்நாத் யாத்ரிகர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்தாரா?. கண்டித்தால் மீண்டும் நாட்டை விட்டு ஓடிவிடுவேன் என்று ஒப்பாரிவைக்கும் நிலைக்கு தள்ளிவிடுவார்கள் என்கிற பயமா?.

 

கலாசாரம், பண்டிகை, இறை வழிபாடு என்று பல வழிகளிலும் பழமையைப் பரப்ப முற்படுகின்றனர் என்கிறார். இந்த தேசத்தின் ஆணிவேரே இதுதானே?. ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதே இல்வாழ்கை. பிறன் மனை நோக்க கூடாது என்பதே நமது ஒழுக்கம். இவை போன்றவைகள் தானே இந்த மண்ணின் கலாச்சாரம்,. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்கிற காலித்தனத்தை பரப்ப எத்தனிப்பவர்களுக்கு நம் கலாச்சாரம் கசக்கத்தான் செய்யும். அதை பழமை என்று ஒதுக்கத்தான் செய்வார்கள்.

நம் கலாச்சாரமும் அதன் உள்ளடக்கங்களான  பண்டிகைகளும், இறை வழிபடும், வேதங்களும் மனிதனின் மனம் சார்ந்த இன்ப வாழ்வை போதிக்கின்றன. ஆனால் மேற்க்கத்திய கலாச்சாரங்கள் பொருள் சார்ந்த, உடல் சார்ந்த திருப்தியை, சுகவாழ்வை மட்டுமே போதிக்கின்றன, அவை மன அழுத்தம் அதிகம் நிறைந்த சமூகத்தைத் தான் உருவாக்குகிறது. அதன் வெளிப்பாடுதான் ஐரோப்போவில் மனோ நிலை பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் காணப்படுவதும். அதில் ஒரு சிலர் தான் மட்டும் சாகாமல் பலரையும் சுட்டு கொன்று விட்டு சாவதும்.

இறுதியாக கேரள கம்யூனிஸ்ட் அரசின் சமூக நீதியையும், மனிதாபிமானம் அற்ற அதன் முதல்வர் பிரணாய் விஜெயனையும் போற்றியுள்ளார். கடந்த 17 மதத்தில் 17க்கும் அதிகமான, 25ந்து வருடத்தில்  100க்கும் அதிகமான அரசியல் படுகொலைகளை நடத்தியவர்கள் இந்த கம்யூனிஸ்ட்கள். இவர்களால் வறுமையை இதுவரை ஒழிக்க முடியவில்லை. இவர்களின் சித்தாந்தம் உலக  அளவில் தோற்றுப்போன ஒன்று. சினாவின் ஒரு மாகாணத்தில் இஸ்லாமியர்கள் தங்கள் மத அடையாளத்தையும், புனித நூலையும் துறந்தே வாழ்கின்றனர்,. அடக்கு முறையே கம்யூனிசத்தின் சமூக நீதி. கமல் போன்ற அவதூறு பரப்பும் அரவிந்த் கேஜ்ரிவாக்கள் என்றோ தூக்கிலிடப்பட்டு இருப்பார்கள் கம்யூனிசம் மட்டும் இந்தியாவை ஆண்டிருந்தால்.

நன்றி; தமிழ்த் தாமரை VM வெங்கடேஸ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...