நவம்பர் எட்டு பொன்னெழுத்துக்களில் பொறிக்க வேண்டிய தினம்

நவம்பர் எட்டு இந்திய நிதி வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் பொறிக்க வேண்டிய தினம் ஆகும். இந்தியாவின் முக்கிய கருப்பு பணம் பதுக்கியுள்ள அரசியல்வாதிகள், பெரும் வியாபாரிகள், முதலாளிகள், ஹவாலா விற்பன்னர்கள், கடத்தல் முதலைகள், பாகிஸ்தானின் ஐ எஸ் ஐ ஆகியவை தாங்கள் வைத்திருந்த கட்டு கட்டான பழைய ஆயிரம், ஐநூறு ரூபாய் கட்டுகளை ஒரு பத்து சதவீதத்தை கூட மாற்றமுடியாமல் , பாக்கி இருந்த தொண்ணூறு சதவீதத்தை கொளுத்தியும், சாக்கடை மற்றும் இதர நீர்நிலைகளில் வீசியும் , கிழித்து குப்பை தொட்டிகளில் போட்டும் கருப்பு பண சமாதி கட்டிய நாளின் தொடக்கம் .

இந்திய ரிசர்வ் வங்கி எவ்வளவு ரூபாய் நோட்டுக்களை அச்சடித்ததோ , அதைவிட அதிகமாக இந்திய ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து , தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளாக உள்ள பாகிஸ்தானிய லஸ்கர் ஈ தாயிபா போன்ற மூடக்கும்பல்வசம் வழங்கிய பாகிஸ்தானின் ஐ எஸ் ஐ , அந்த கள்ள நோட்டுக்களை மாற்ற முடியாமல் பல ஆயிரம் கோடி கள்ள நோட்டுக்களை புதைக்க முடியாமல் , தீயிட்டு கொளுத்திய நாள்.

நேபாளம் மூலமாக இந்தியாவுக்குள் போதை மருந்துகளை இலங்கை வரை கடத்தும் கடத்தல் மன்னர்கள் தலையில் இடிவிழுந்த நாள்.

உயர் மதிப்பு பணம் செல்லாததாக அறிவிக்கப்பட்டு சுமார் ஒரு ஆண்டுக்காலம் முடிவடைந்த பின்னரும், நேற்றுக்கூட மீடியாவில் செய்தி வருகிறது. பழைய ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் சுமார் 36 கோடி ரூபாய் காஷ்மீரத்து பயங்கரவாதிகளிடம் இருந்து பிடிபட்டுள்ளது என்று.

இதிலிருந்து என்ன தெரியவருகிறது ? நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பழைய ஆயிரம் ஐநூறு ரூபாய் நோட்டுக்களை செல்லுபடியாக்குவோம் என்று சோனியாவின் அடிமை ஒன்று சென்ற சில வாரங்களுக்கு முன்னர் கூவியதை அறிவோம். அந்த பழைய நோட்டுக்கத்தைகள் கோடி கோடியாக இன்னமும் , இந்திரா காங்கிரஸ்காரனிடமும், அவர்கள் ஆதரிக்கும் பயங்கரவாதக் கும்பல்களிடமும் தான் பதுங்கி உள்ளது என்பது நிதர்சனம் .

கோடிகோடியாக வாங்கிய லஞ்சப்பணத்தில் ஒரு பகுதியை அசையா சொத்துக்களில் பினாமி பெயரில் முதலீடு செய்த பின்னர் எஞ்சிய பெரும் பகுதியை ஆயிரம் ஐநூறாக வைத்திருந்த அரசியல் கொள்ளையர்கள் தலையில் இடி விழுந்த நாள்.

மாணவர்கள் மூலம் கருப்பு பணத்தை வெள்ளையாக்க முயன்ற கல்வித்தந்தைகள் மாட்டிக்கொண்ட நாள்.

காஷ்மீரில் பாகிஸ்தானின் கூலிப்படை இந்திய ராணுவம் மீது கல்வீசுவது காணாமல் போனது இந்த ரூபாய் நோட்டுக்கள் செல்லாமல் போனதால் தான்.

ஜார்கண்ட் போன்ற மாநிலங்களிலும், இந்தியாவின் பல பகுதிகளிலும் இருக்கும் மாவோயிஸ்ட், நக்சலைட் தீவிரவாதிகளும், பயன்கரவாதிகளும் தங்களது சீன எஜமானர்கள் கொடுத்த கோடிக்கணக்கான ஆயிரம் ரூபாய் ஐநூறு ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாமல் ஊர் ஊராக புகுந்து பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்தது இந்த நடவடிக்கையால் தான்.

இந்திய சுதந்திரம் அடைந்த பின்னர், இரண்டாவது முறையாக , நியாயமாக வரி செலுத்தும் இந்திய குடிமகனும், வரிகட்டும் அளவு வருமானத்துக்கே வழி இல்லாத ஏழை இந்தியர்களும் மகிழ்ச்சி அடைந்த நாள்.

மொரார்ஜிக்கு பிறகு மோடி தான். மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த போதுதான் , இந்திய வரலாற்றில் முதன் முறையாக உயர் மதிப்பு கரன்சியை 1978-79 காலக்கட்டத்தில் ( பத்தாயிரம் ரூபாய் ) செல்லாததாக அறிவித்தார். அப்போது குஜராத்தில் சூரத்தில் வைர வியாபாரிகள் சிலர் பத்தாயிரம் ரூபாய் கரன்சி கட்டுக்களை கொளுத்தினர் என்பதை மீடியா அறிவித்தது.

அதன் பிறகு சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு பின்னர் , மோடி இந்த நடவடிக்கையை தொடர்ந்து இந்திய பொருளாதாரத்தை சரியான பாதைக்கு திருப்பினார்.

வாழ்க நீவிர் . உம் குலம் ஓங்குக என்று முருகப்பெருமான் அருளால் நாம் இத்தகையோர் எண்ணிக்கை பெருகவேண்டும் என்று வேண்டி தொடர்ந்து பிராத்தனை செய்து வாழ்த்துவோம்.

வையகம் வளமுடன் வாழ்க

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...