சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு: இவாங்கா டிரம்ப் வருகை

சர்வதேச தொழில்முனைவோர் மாநாடு வருகிற 28-ந்தேதி ஐதராபத்தில் நடைபெறுகிறது. மாநாட்டை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைக்கிறார்.

இம்மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் கலந்து கொள்கிறார். அமெரிக்க தொழில் முனைவோர் குழுவுக்கு இவர் தலைமைதாங்கி அழைத்து வருகிறார். ஐதராபாத்தில் இவர் 3 நாட்கள் தங்குகிறார்.

இவாங்கா டிரம்ப் வருகையை யொட்டி ஐதராபாத்தில் பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஐதராபாத்தில் தங்கும் இவாங்கா டிரம்புக்கு 5 அடுக்கு பாதுகாப்பு கொடுக்கப் படுகிறது. முதல் 2 அடுக்குகளில் அமெரிக்க ரகசியபோலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

இந்திய சிறப்பு பாதுகாப்பு படையினர் 3-வது அடுக்குபாதுகாப்பை கவனிக்கின்றனர். அதையடுத்து 4 மற்றும் 5-வது அடுக்குபாதுகாப்பில் தெலுங்கானா உளவுப்பிரிவு பாதுகாப்பு போலீசார் ஈடுபடுகின்றனர். இவர்கள் தீவிரவாத தடுப்புபயிற்சி மேற்கொண்டவர்கள்.

இவாங்காவுக்கு மிரட்டல்கள் இருப்பதால் சர்வதேச தொழில்முனைவோர் மாநாடு நடைபெறும் இடத்தில் 3 கி.மீ சுற்றளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. இவர் வெஸ்டின் ஓட்டலில் தங்க ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. இது மாநாடு நடைபெறும் இடத்தின் அருகே உள்ளது.

அதேநேரத்தில் வரலாற்று சிறப்புமிக்க பலாக்னுமா அரண்மனையிலும் தங்கவாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால் அது உறுதியாக தெரியவில்லை. ஆனால் இங்கு தெலுங்கானா அரசு சார்பில் இவருக்கு முதல்-மந்திரி சந்திரசேகரராவ் விருந்து அளிக்கிறார். அதற்காக இந்த அரண்மனை ஓட்டல் போன்று மாற்றப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளைதான் ஓட்டல் நிர்வாகம் செய்துள்ளது.

இவாங்கா வருகையையொட்டி அமெரிக்காவின் ரகசியபோலீஸ் குழு பல தடவை ஐதராபாத் வந்து ஓட்டல்கள், மாநாடு நடைபெறும் இடம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.

ஐதராபாத்தில் இவாங்கா டிரம்ப் பயணம்செய்ய அமெரிக்க உளவுப்படை குண்டு துளைக்காத புல்லட்‘புரூப்’ கார்களை கொண்டுவருகிறது. துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும், பயிற்சி பெற்ற மோப்ப நாய்களும் வரவழைக்கப் படுகின்றன. மொத்தத்தில் அமெரிக்க அதிபருக்குரிய பாதுகாப்பு வழங்கப்படுவதாக இந்தியாவுக்கான அமெரிக்கதூதர் தெரிவித்தார்.

ஐதராபாத்தில் தங்கும் இவாங்கா சார்மினார், லாட்பஜார் உள்ளிட்ட இடங்களுக்கு செல்கிறார். பிரதமர் மோடியுடன் விருந்தில் பங்கேற்கிறார். மேலும் அவர் வரலாற்று சிறப்புமிக்க கோல்கோண்டா கோட்டைபகுதிக்கு சென்று ஷாப்பிங் செய்வார் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை.

அமெரிக்க அதிபர் டிரம்ப்மகள் வருகையையொட்டி ஐதராபாத் ரோட்டில் நடமாடும் பிச்சைக் காரர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வேறு இடத்துக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...