மலேசியா மணல் இறக்குமதி செய்ய பட்டு தேங்கி இருப்பதால், அதைபயன்படுத்த வேண்டும் என்பது சரியான நடவடிக்கைதான் என பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 6 மாதங்களுக்குள் அனைத்து மணல்குவாரிகளும் மூடப்படவேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் மேற்கொண்டு புதிதாக மணல் குவாரிகள் திறக்கவும் தடை விதிக்கப் பட்டுள்ளது. சட்ட விரோதமாக மணல் கடத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்றும், இதற்காக கண்காணிப்புகுழு அமைக்கப்பட வேண்டும் என்றும், சட்டவிரோத மணல் விற்பனைக்கு துணைநிற்கும் அதிகாரிகள் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியதாவது, “இயற்கை வளங்களை பாதுகாக்கவும், மணல் கொள்ளையை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆற்றுமணலுக்கு மாற்று என்ன என்பதை அரசு யோசித்திருக்க வேண்டும். நீதிமன்றத்தின் எந்ததீர்ப்பாக இருந்தாலும், அது கட்டுமான பணியையோ, மற்ற தொழில்களையோ, தொழிலாளர் களையோ, நாட்டின் முன்னேற்றத்தையோ பாதிக்கக் கூடாது என்பதில் அனைவருமே குறியாக இருக்கவேண்டும். மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் விநியோகிக்கவும் முடியாமல், அனுப்பவும் முடியாமல் ஒரே இடத்தில் தேங்கிக்கிடந்தது. அதனால் அந்த மணலை பயன்படுத்த வேண்டும் என்பது சரியான நடவடிக்கைதான்” என்று கூறினார்.
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.