பினாமி சொத்துகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆதார் எண் சிறந்தஆயுதமாக விளங்கும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
தனியார் பத்திரிகை சார்பில் டெல்லியில் நேற்று நடைபெற்ற தலைமைப் பண்பு தொடர்பான மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டு பேசியதாவது:
கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மக்களவை பொதுத்தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை தோற்கடித்து தேசியஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. அப்போது, நம் நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில்இருந்தது. வங்கிநடைமுறை மற்றும் நிர்வாக கட்டமைப்பும் சீர்குலைந்திருந்தது.
ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்றபிறகு அடுத்தடுத்து பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. குறிப்பாக கறுப்புப்பணம், ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், மக்களின் பழக்க வழக்கத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சுதந்திரத்துக்கு பிறகு முதல் முறையாக, முறைகேடான வழியில் பணம்சேர்க்க ஊழல்வாதிகள் தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முன்பு கறுப்புபணமாக உலவி வந்த பல ஆயிரம் கோடி பணம் இப்போது முறையான பணமாக மாறி உள்ளது. இதனால் அரசுக்கு வரிவருவாய் அதிகரித்துள்ளது.
ஆதார் எண் நடை முறையால் சாதாரண பொது மக்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. தொடக்கத்தில் ஆதார் எண் எந்தளவுக்கு சாத்தியமாகும் என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், இப்போது செல்போன் எண், ஜன்தன் வங்கிக் கணக்கு, சமையல் எரிவாயு இணைப்பு என எல்லாவற்றுடனும் ஆதார் இணைக்கப்பட்டுவருகிறது. இதனால் பொதுமக்கள் அதிக பலன் அடைந்து வருகின்றனர்.
குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளில் ஆதார் எண்காரணமாக, அரசின் பல்வேறு மானியங்களை பெற்றுவந்த கோடிக் கணக்கான போலிபெயர்கள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளன. இதனால் அரசுக்கு பல ஆயிரம்கோடி மிச்சமாகி உள்ளது. இந்தவரிசையில் பினாமி சொத்துகளுக்கு எதிரான நடவடிக்கைக்கும் ஆதார் எண் மிகப் பெரிய ஆயுதமாக பயன் படுத்தப்பட உள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நடைமுறை அமலுக்குவந்ததன் மூலம் நாட்டில் வெளிப்படைத் தன்மை அதிகரித்துள்ளது. இதுபோல வங்கி, அரசு நிர்வாக நடைமுறைகள் மேம்பட்டுள்ளன. ஒட்டு மொத்த சாதாரண பொது மக்களின் வாழ்க்கைத்தரமும் உயர்ந்து வருகிறது. இதனால், உலக நாடுகளின் பார்வை மீண்டும் இந்தியாபக்கம் திரும்பி உள்ளது. அதாவது தொழில் செய்வதற்கு உகந்தநாடுகள் பட்டியலில் 142-லிருந்து 100-வது இடத்துக்கு இந்தியா முன்னேறி உள்ளது.
அதேநேரம் மத்திய அரசின் சிலசீர்திருத்த நடவடிக்கைகளால் அரசியல் ரீதியில் மிகப்பெரிய விளைவு ஏற்படும் என்பதையும் உணர்ந்துள்ளேன். ஆனாலும் நாட்டின் சிறந்த எதிர் காலத்துக்காக எத்தகைய இழப்பையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளேன். நாட்டு நலனுக்காக மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளை யாராலும் தடுத்துநிறுத்த முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ... |
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.