ஐக்கிய ஜனதா தள கட்சியின் அதிருப்தி எம்.பி.க்களான சரத்யாதவ் மற்றும் அலி அன்வர் ஆகியோரை தகுதிநீக்கம் செய்து துணை குடியரசுத்தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கய்யநாயுடு உத்தரவிட்டுள்ளார்.
பிஹாரில் ஐக்கிய ஜனதாதள கட்சி கடந்த 2013-ம் ஆண்டு பாஜக.,வுடனான உறவைத் துண்டித்தது. நரேந்திர மோடியை பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவித்ததற்கு எதிர்ப்புதெரிவித்து ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் இருந்துவிலகியது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட்மாதம் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடன் ஐக்கிய ஜனதாதளம் இணைந்தது.
இதற்கு ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சரத்யாதவ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அன்வர் அலி எம்.பி. உள்ளிட்ட ஆதரவாளர்களுடன் அதிருப்தி அணியாக சரத் யாதவ் செயல்படத்தொடங்கினார். மத்திய பாஜக அரசையும், பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசையும் கண்டித்து பாட்னாவில் எதிர்க்கட்சிகள் நடத்திய பேரணியில் அவர் கலந்துகொண்டார்.
இதையடுத்து ஐக்கிய ஜனதாதள எம்பியான சரத் யாதவ் மற்றும் அலி அன்வர் ஆகிய இருவரும், கட்சிக்கு எதிராக செயல்படுவதால் அவர்கள் மீது கட்சித்தாவல் தடைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐக்கிய ஜனதாதளம் சார்பில் மாநிலங்களவைத் தலைவரும் துணை குடியரசுத் தலைவருமான வெங்கய்ய நாயுடுவிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதனிடையே நிதிஷ்குமார் தலைமையிலான அணியை, ஐக்கிய ஜனதாதள கட்சியாக தேர்தல் ஆணையம் சமீபத்தில் அங்கீகரித்து உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, நிதிஷ்குமார் அணியினர் அளித்த புகாரைவிசாரித்த வெங்கய்ய நாயுடு, ஐக்கிய ஜனதாதள கட்சியின் மூத்த தலைவர்களும், மாநிலங்களவை எம்.பி.க்களுமான சரத்யாதவ் மற்றும் அலி அன்வர் ஆகிய இருவரையும் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
மாநிலங்களவை எம்.பி.யாக கடந்த ஆண்டு தேர்வுசெய்யப்பட்ட சரத் யாதவின் பதவிக்காலம் 2022-ம் ஆண்டுவரை உள்ளது. அலி அன்வரின் பதவிக் காலம் அடுத்த ஆண்டுடன் நிறைவு பெறுகிறது.
குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ... |
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.