தமிழக மீனவர்களை மீட்க குஜராத், மஹாராஷ்ட்ரா அரசுகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஒகி புயலால் திசைமாறி சென்ற தமிழக மீனவர்கள் நூற்றுக் கணக்கானோர் குஜாராத் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்டபின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொன்.ராதாகிருஷ்ணன், குஜராத், மஹாராஷ்ட்ரா, லட்சத்தீவில் தஞ்மடைந்துள்ள மீனவர்களை தமிழகம் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன் மீனவர்களை மீட்பது தொடர்பாக குஜராத் மற்றும் மஹாராஷ்ட்ரா மாநில அரசுகளுடன் தாம் பேசியுள்ள தாகவும் அவர் கூறினார். கன்னியாகுமரி வந்துள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடனும் இதுகுறித்து தாம் ஆலோசித்திருப்பதாகவும் குறிப்பிட்டார். ஒகி புயலில் உயிரிழந்த மீனவர் குடும்பத்தினருக்கு கேரள அரசு வழங்கியதற்கு ஒப்பானஇழப்பீட்டை தமிழக அரசும் வழங்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.