ஆமதாபாத்தில் நடந்த பா.ஜ.க, எம்எல்ஏக்கள் கூட்டத்தில், குஜராத் முதல்வராக விஜய்ரூபானி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். நிதின்படேல் துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
குஜராத் சட்ட சபைக்கு நடந்த தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை கடந்த 18-ம்தேதி நடந்தது. இதில் பா.ஜ. பெருபான்மை தொகுதிகளை கைபற்றி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்நிலையில் புதியமுதல்வரை தேர்வு செய்யும் நடவடிக்கையில் பா.ஜ. மேலிடம் இறங்கியது. இதற்கான ஆலோசனைகூட்டம் ஆமதாபாத்தில் நடந்தது. கட்சியின் மேலிட பார்வையாளரான அருண்ஜெட்லி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் வெற்றிபெற்ற எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் முதல்வராக விஜய் ரூபானியும், துணை முதல்வராக நிதின் படேலும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர். இதனை, கூட்டத்திற்கு பின் அருண் ஜெட்லி நிருபர்களிடம் கூறினார்.
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.