எம்.எல்.ஏ-வின் மகன்கள் ஆடிகாரில் பவனிப்பதைப் பார்த்திருக்கிறோம். ராஜஸ்தானின் ஜம்வா ராம்கார் தொகுதி பாரதிய ஜனதா எம்எல்ஏ., ஜக்தீஷ் நாராயண் என்பவரின் மகன் ராமகிருஷ்ணா, பியூன்வேலையில் சேர்ந்திருக்கிறார். எம்.எல்.ஏ-வின் செல்வாக்கால் மகனுக்கு பியூன்வேலை கிடைத்துள்ளதாக சர்ச்சையும் எழுந்துள்ளது.
ராஜஸ்தான் மாநில தலைமைச் செயலகத்தில், பியூன்வேலைக்கு 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தனர். அதில், 10-ம் வகுப்புபடித்த ராம்கிருஷ்ணாவும் ஒருவர். இவர், பழங்குடியினப் பிரிவைச் சேர்ந்தவர். ஆனால், இந்தபடிப்புக்கு 5-ம் வகுப்பு வரை படித்திருந்தால் போதுமானது. அந்தவகையில், ராம்கிருஷ்ணா அதிக தகுதியுடையவராகிறார்.
''ராம்கிருஷ்ணா 10-ம் வகுப்புவரை படித்திருக்கிறார். அதிகத் தகுதியுடைய இவருக்கு, ஏன் இந்தப்பணி வழங்க வேண்டும்? எம்.எல்.ஏ-வின் செல்வாக்கு காரணமாக மகனுக்கு பியூன்வேலை கிடைத்துள்ளது'' என்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த எம்.எல்.ஏ., ஜக்தீஷ் நாராயண் மீனா கூறுகையில், '' என் செல்வாக்கை பயன் படுத்தி மகனுக்கு பியூன் வேலைதான் வாங்கித் தரவேண்டுமா. இதைவிட நல்ல வேலையில் அல்லவா சேர்த்து விடுவேன். என் மகன் தேர்வில் எந்தத்தவறும் இல்லை. நேர்மையான முறையில்தான் அவனுக்கு வேலை கிடைத்திருக்கிறது. இவர்தான் என் மூத்தமகன். எனது விவசாய நிலத்தையும், தன் சகோதரர்களையும் அவன் பார்த்துக் கொண்டதால், மேலே படிக்கவைக்க முடியவில்லை'' என்றார்.
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ... |
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.