கம்பெனி பதிவேட்டில் இருந்து மேலும் 1.2 லட்சம் நிறுவன ங்களை நீக்க மத்திய அரசு முடிவு

கம்பெனி பதிவேட்டில் இருந்து மேலும் 1.2 லட்சம் நிறுவன ங்களை நீக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. கருப்பு பண மீட்பு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக, செயல்படாத நிறுவனங்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. குறிப்பாக  பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு போலி நிறுவனங்கள் மூலம் கருப்புபணம் மாற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பணமதிப்பு நீக்கத்தை  தொடர்ந்து, 2,138 நிறுவன கணக்குகளில் மொத்தம் 1,321 கோடி டெபாசிட் செய்யப் பட்டது இதை தொடர்ந்து சுமார் 2.1 லட்சம் நிறுவன பதிவுகளை  கம்பெனிசட்ட விதிகளின்படி மத்திய அரசு ரத்துசெய்தது. கடந்த ஆண்டு டிசம்பர் வரை 2.26 லட்சம் நிறுவனங்கள் நீக்கப் பட்டுள்ளன.  இது வரை சுமார்  2.26 லட்சம் நிறுவனங்கள் பதிவேடுகளில் இருந்து நீக்கப்பட்டு, இவற்றில் பணியாற்றிய 3.09 லட்சம் இயக்குநர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  

இவர்கள் 5 ஆண்டுகளுக்கு எந்த நிறுவனத்திலும் பணிபுரிய தடை விதிக்கப் பட்டுள்ளது. தகுதி நீக்கப்பட்டவர்களில் சசிகலா, கேரள முன்னாள் முதல்வர்  உம்மன் சாண்டி, கேரள  எதிர்க் கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோரும் அடங்குவர்.  இந்நிலையில் மத்திய நுகர்வோர் விவகார இணையமைச்சர் பி.பி.சவுதாரி தலைமையிலான ஆய்வுக் கூட்டத்தில் 1.2 லட்சம் நிறுவனங்களை நீக்க  முடிவு செய்யப் பட்டுள்ளது. கம்பெனி சட்ட விதிகளை மீறியது மற்றும் சட்ட விரோத பண பரிமாற்றம் கண்டறியப்பட்டதால் இந்த நடவடிக்கை  எடுக்கப்பட உள்ளதாக நுகர்வோர் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இந்தவிவகாரத்தில் தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் 1,157 வழக்குகள்  பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 180 நிறுவனங்கள், கம்பெனி விதிகளை பூர்த்திசெய்ததால் மீண்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

* கடந்த டிசம்பர் மாதம் வரை 2.26 லட்சம் நிறுவனங்கள்  நீக்கம்.
* 3.09 லட்சம் இயக்குநர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
* சட்ட விதிகளை பூர்த்திசெய்ததால் 180 நிறுவனங்கள் மீண்டும் செயல்பட அனுமதி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...