நான், உங்கள் மத்தியில், நாட்டின் பிரதமராக பேசவரவில்லை. உங்களில் ஒருவனாய், ஒரு மாணவனாய் உரையாற்றுவதில் பெருமைகொள்கிறேன். என்னை, இன்றும் ஒருமாணவனாக உணரச்செய்த, என் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.பெற்றோர், தங்கள் கனவுகளை, குழந்தைகள் மீது திணிக்கக்கூடாது. அவர்களுக்கு எது பிடிக்கிறது; எதில் அவர்கள் நாட்டம்செல்கிறது என்பதை கூர்ந்து கவனித்து, அதன்படி செயல்பட வேண்டும்.
அவர்களை சரியான பாதையில் வழி நடத்துவது மட்டுமே, பெற்றோரின் கடமை.மாணவர்கள், தேர்வைகண்டு அஞ்ச தேவையில்லை. அதை, தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். நினைவாற்றல், தன்னம் பிக்கையை வளர்த்துக் கொண்டால், எந்ததேர்விலும் சாதிப்பது சாத்தியமே. தன்னம்பிக்கை என்பது, மருந்து, மாத்திரைகளால் வருவதல்ல.
அது, நமக்குள் பிறக்கவேண்டும். ஒவ்வொரு நாளும், அதை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
என் பள்ளிபருவத்தில், சுவாமி விவேகானந்தரின் அறிவுரைகளை அதிகம் படித்துள்ளேன்.அதில் மிகச்சிறந்த ஒரு வாசகம், 'உனக்கு எவ்வளவு தான் கடவுள் நம்பிக்கை இருந்தாலும், தன்னம்பிக்கை இல்லா விட்டால், எதையும் சாதிக்க முடியாது' என்பதே அது.
எந்தவொரு விஷயத்தையும், அறிவுக்கூர்மை யுடனும், உணர்வுபூர்வமாகவும் அணுகவேண்டும். நம் குழந்தைகள், பிறப்பிலேயே அரசியல்வாதிகள். தங்களின் வேலையை, தங்களுக்கு தேவையானதை எப்படி முடித்துக்கொள்ள வேண்டும் என்பதை, அவர்கள் நன்கு அறிவர்.
தேர்வை ஒருவிழாவாக எண்ணி கொண்டாடவேண்டும். கவலைப்படுவதை விடுத்து, மகிழ்ச்சியுடனும், புத்துணர்ச்சியுடனும், ஒரு போர் வீரனைப்போல், தேர்வை அணுக வேண்டும். நம்பிக்கை, துணிச்சல், மகிழ்ச்சியுடன்தேர்வை சந்தித்தால், நீங்கள் சாதிப்பது நிச்சயம்.
பல மொழி பேசும் மாணவர்கள் மத்தியில்,அவர்களின் மொழியில்பேச முடியாததை எண்ணி வருந்துகிறேன். உதாரணத்திற்கு, தமிழ்மொழி மிக அழகானது. சமஸ்கிருதத்தை விட மிகவும் தொன்மையானது. அந்த மொழியில், 'வணக்கம்' என்ற வார்த்தையை தவிர, வேறு எதுவும் தெரியாது என்பது, எனக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
டில்லியில் நேற்று நடந்த சிறப்பு நிகழ்ச்சியில், ஆயிரக் கணக்கான மாணவர்கள் மத்தியில், பிரதமர் நரேந்திரமோடி கலந்துரையாடியது.
புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம். |
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.