திரிபுரா தேர்தலில் பாஜக வெற்றிபெற்றுள்ளதை அடுத்து, அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத்தலைவராக விப்லவ் குமார் தேவ் (48) தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாநில முதல்வராக அவர் வரும் 9-ம் தேதி பதவியேற்கவுள்ளார்.
திரிபுரா சட்டப் பேரவைத் தேர்தல் கடந்த பிப்ரவரி 18-ம் தேதி நடைபெற்றது. 59 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 43 தொகுதிகளில் பாஜககூட்டணி அமோகவெற்றி பெற்றது. பாஜக தனியாக 35 தொகுதிகளையும், அதன் கூட்டணிக் கட்சியான திரிபுரா பழங்குடியின மக்கள்முன்னணி (ஐபிஎப்டி) 8 தொகுதிகளையும் கைப்பற்றின. 25 ஆண்டுகளுக்கும் மேலாக திரிபுராவை ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு இத்தேர்தலில் வெறும் 16 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன.
திரிபுராவில் பாஜக வெற்றிபெற்றதை அடுத்து, அம்மாநிலத்தில் அடுத்த முதல்வராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்த கட்சியின் ஆட்சிமன்றக் குழுக்கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திரிபுரா பாஜக தலைவராக உள்ள விப்லவ் குமார் தேவின் பெயரை பெரும்பாலான உறுப்பினர்கள் முன்மொழிந்தனர். இதனைத்தொடர்ந்து,
திரிபுரா சட்டப்பேரவைக் குழுத் தலைவராக விப்லவ் குமார் தேவ் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப் பட்டார். இதன் மூலம் திரிபுரா புதிய முதல்வராக அவர் பதவியேற்பது உறுதி செய்யப்பட்டது. திரிபுரா துணை முதல்வராக அம்மாநில பாஜக பழங்குடியினர் அணி ஒருங்கிணைப்பாளர் ஜிஷ்ணு தேபர்மா தேர்வுசெய்யப்பட்டார்.
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.