மோடி ஒரு விதத்தில் தமிழ்நாட்டை காப்பாற்றி இருக்கிறார்

ஏன் மத்திய அரசு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தர மறுக்கிறது. தெரிந்து கொள்வோம்

சந்திரபாபு நாயுடு ஏன் கோபித்துக்கொண்டார்? உண்மையாக மத்திய அரசு துரோகம் செய்ததா? அவர்கள் கேட்க்கும் special category status (சிறப்பு அந்தஸ்து)என்றால் என்ன?

கொஞ்சம் வரலாற்றை பார்த்துவிட்டு நிகழ்காலத்துக்கு வருவோம்.. 2014 ல் ஆந்திரா தெலங்கானா இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டபொழுது , அப்போதைய ஆந்திரா தங்கள் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து 10 ஆண்டுகளுக்கு வழங்கவேண்டும்.. ஐதராபாத் எங்கள் மாநிலத்தை விட்டு போவதால் , எங்களுக்கு பெரிய பொருளாதார நஷ்டம் ஏற்படும் என்றது.. அன்று ராஜ்ய சபையில் மன்மோகன் சிங்க் இந்த தீர்மானத்தை படித்தபொழுது, வாய்வழியாக 5 ஆண்டுகளுக்கு தருகிறோம் என்று ஒப்புக்கொண்டார்.. அதுதான் இப்பொழுது பிரச்சனை

சரி.. இந்த சிறப்பு அந்தஸ்து கொடுப்பதனால் அவர்களுக்கு என்ன லாபம்? ஏன் மத்திய அரசு இப்பொழுது அதை கொடுக்க மறுக்கிறது?

1 சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலங்கள் , மத்திய அரசின் திட்டங்களுக்கு 90 % நிதியை பெரும்.. 10 % ஐ மத்திய அரசிடமிருந்து கடனாக பெற்றுக்கொள்ளலாம்.. மற்ற மாநிலங்கள் வெறும் 60 % மட்டுமே பெரும்.. 40 % கைக்காசை போட வேண்டும்

2 மத்திய அரசு விதிக்கும் வரியில் (வர்த்தகத்திற்கு) சிறப்பு சலுகை அந்த மாநிலத்துக்கு கிடைக்கும்

3 மத்திய அரசின் பட்ஜெட்டில் 30 % ஐ இந்த மாநிலங்களுக்கு மட்டுமே ஒதுக்க வேண்டும்

4 மத்திய அரசின் நிதியில் இவர்களுக்கே முன்னுரிமை

5 மாநிலத்தின் கடனில் ஒரு பகுதியை மத்திய அரசின் தலையில் கட்டிவிடலாம்

இதுபோன்ற பல விஷயங்கள் இந்த சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலங்களுக்கு கிடைக்கிறது.. இது போன்று முன்னறய காலங்களில் ஜம்மு காஷ்மீர் மற்றும் மற்ற சில மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.. கடைசீயாக ஜார்கண்டுக்கு 2010 ல் கொடுக்கப்பட்டது.. இவையெல்லாம் மிகவும் பொருளாதாரத்தில், கட்டுமானத்தில், கல்வியில் மிகவும் பின்தங்கிய மாநிலங்கள்..

சரி, அப்பொழுது ஏன் ஆந்திராவுக்கு மட்டும் கொடுக்காமல் கழுத்தறுக்கிறது மத்திய அரசு என்று கேட்கலாம்.. அங்கேதான் சிக்கல் இருக்கிறது.. 2014 ன் ஆரம்பத்தில் 14th பைனான்ஸ் கமிஷன் அமைக்கப்பட்டது (இது காங்கிரஸ் அரசு தேர்ந்தெடுத்த அதிகாரிகளால் அமைக்கப்பட்ட கமிஷன்).. எல்லா அரசும் மாநிலங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்குவது, எந்தெந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது என இந்த பைனான்ஸ் கமிஷன்களின் பரிந்துரைகளைப்படிதான் செயல்படும்.. அப்படி இந்த 14 வது பைனான்ஸ் கமிஷனின் பரிந்துரைகளில் ஒன்றானது, இனி எந்த மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க கூடாது, அதற்க்கு பதிலாக , தேவைப்படும் மாநிலங்களுக்கு சிறப்பு நிதி வழங்கலாம் என்று அறிவித்தது.. அதை 2015 ல் மோடி அரசு ஏற்றுக்கொண்டது.. இதில் நீங்கள் கவனிக்கவேண்டியது , இதை ஏற்றுக்கொண்டபொழுது அந்த அரசின் அங்கமாக இருந்துகொண்டு வாய்மூடி பேசாமல் இருந்தவர் சந்திரபாபு நாயுடு.. '''

அப்பொழுதே அவர் இந்த பரிந்துரையை ஏற்றால் நாங்கள் கூட்டணியை விட்டு வெளியே போவோம் என்று சொல்லி இருக்கலாம்.. ஆனால் இப்பொழுது அவர் கத்தி கூப்பாடு போடுவது வேறேதோ காரணத்திற்க்காக.. ஏனென்றால் மோடி அரசு தெளிவாக சொல்லிவிட்டது, சிறப்பு அந்தஸ்துக்கு பதிலாக, அதே அளவு உங்களுக்கு சிறப்பு நிதியை வழங்குகிறோம்.. நாயுடுகாரு அந்த நிதியை பெற அவரிடம் இருக்கும் திட்டங்களை சமர்ப்பிக்கவேண்டும்.. அதை இன்னும் சமர்ப்பிக்கவில்லை.. இதுவரை அவர்கள் அமராவதி நகரம் கட்ட கொடுத்த 2500 கோடியும் இன்னும் செலவு செய்யப்படாமலேயே இருக்கின்றன.. அப்படி இருக்கையில் எப்படி மத்திய அரசு அவ்வளவு பெரிய தொகையை தூக்கி கொடுக்கும்?

நம் டுமிலர்கள் , நாயுடுகாரு மோடியை எதிர்ப்பதனாலேயே அவரை ஒரு கதாநாயகனாக கொண்டாடுகிறார்கள்.. ஆனால் விஷயம் என்னவென்றால், நமது அண்டை மாநிலமான ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்தால், அடுத்த ஐந்தாண்டுகளில் இங்கே எல்லா தொழில் நிறுவனங்களும் கடையை சாத்திவிட்டு ஆந்திராவிற்கு சென்றுவிடும்..ஏனென்றால் அவர்களுக்கு வரி விடுமுறை, மத்திய அரசு வரிச்சலுகை என அள்ளிக்கொடுக்கப்படும்.. நாம் இங்கே வாயில் விரலைபோட்டுக் கொண்டிருக்க வேண்டியதுதான்.. அதனால்தான் ஜெயலலிதா ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கொடுப்பதை எதிர்த்தார்..மோடி ஒரு விதத்தில் தமிழ்நாட்டை காப்பாற்றி இருக்கிறார்… அவருக்கு நன்றி சொல்ல வேண்டிய இந்த மூடர்கள் கூட்டம், அவரை திட்டிக்கொண்டு திரிகிறது, நாய்டுவை புகழ்கிறேன் என்று..

நன்றி; ஹரிதாசன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...