ராமராஜ்ய ரத யாத்திரையை மதவாதம் என்று சொல்வது வியப்பாக இருப்பதாக பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார். நேர்மையான, தூய்மையான ஆட்சிதான் ராமராஜ்யம், இதனை எதிர்ப்பவர்களே ராமராஜ்ய ரதயாத்திரையை எதிர்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
முகநூலில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது : உத்திரபிரதேசத்தில் ராம ஜென்ம பூமியில் இருந்து தொடங்கி வைக்கப்பட்ட ராமஜென்ம ரத யாத்திரை 5 மாநிலங்களில் அதனுடைய யாத்திரையை முடித்து இன்று காலையில் கேரளாவில் தொடங்கி செங்கோட்டையை அடைந்திருக்கிறது. இதுதமிழகத்திலே மதுரை, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று அங்கிருந்து மீண்டும் திருவனந்தபுரம் சென்று மீண்டும் மற்றமாநிலங்களுக்கு செல்ல இருக்கிறது. இந்தயாத்திரையின் நோக்கம் ராமராஜ்யம். இந்த யாத்திரையின் பெயரே ராம ராஜ்ய ரத யாத்திரை.
ராம ராஜ்ய ரதயாத்திரையை ஏதோ மத வாதம் என்றும் இதனை தடைசெய்ய வேண்டும் என்றும் பேசுவது வியப்பாக உள்ளது. ஏனெனில் ராம ராஜ்யம் என்பது தூய்மையான, நேர்மையான, ஒழுக்கமான ஆட்சி என்று மகாத்மா காந்தியே குறிப்பிட்டுள்ளார். காந்திஜி சுதந்திர இந்தியா பெற்றஉடன் ராம ராஜ்ஜியம் ஏற்படுத்தப்படும் என்று கூறி இருக்கிறார். ஆனால் ஒழுக்கமான, தூய்மையான, நேர்மையான ஆட்சிக்கு எதிராக இருப்பவர்கள் இந்தயாத்திரையை எதிர்க்கிறார்கள்.
இவர்களுக்கு ஒருதகவல் சொல்ல விரும்புகிறேன், அரசியலமைப்பு ஏற்படுத்துவதற்கு முன்னர் சட்டம் கையால் எழுதப் பட்டது. அவை இன்றும் நாடாளுமன்றத்தில் வைக்கப் பட்டுள்ளது. அந்த கையால் எழுதியசட்டத்தில் முதல் பக்கத்திலேயே ராமரின் படம்தான் இருக்கிறது. ராமனின் படத்தை அரசியல் சட்டத்திலேயே வைத்துள்ளது, ராமர் நம் அரசியலமைப்பின் ஒருஅங்கம். அப்படி இருக்கும்போது ராம ராஜ்ய ரத யாத்திரை வரக்கூடாது என்று எதிர்ப்பவர்கள் யார்?
வைகோ, திமுக மற்றும் தீவிரவாத மத மாற்றும் சக்திகளின் ஏஜென்டுகள்தான் இதனை எதிர்க் கிறார்கள். இடதுசாரி கட்சிகள், நாத்திகர்கள், மதமாற்றும் சக்திகள் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் அரசியல் சக்திகள்தான் ரத யாத்திரையை எதிர்க்கிறார்கள். தமிழக அரசு 144 தடை உத்தரவு போட்டுள்ளது, 144 உத்தரவு ரதயாத்திரைக்கு இல்லையா என்று கேட்கிறார்கள். 144 தடை உத்தரவு மதசம்பந்தமான எந்த ஊர்வலங்களுக்கும் பொருந்தாது, இந்தயாத்திரையை தடை செய்ய முடியாது தமிழக அரசு சரியான நடவடிக்கை எடுத்துள்ளது.
யாத்திரைக்கு அனுமதித்தது மட்டுமின்றி யாத்திரையை எதிர்க் கின்ற இந்துக்களை சிறுபான்மை யினராக்க முயற்சிக் கின்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இந்து விரோத சக்திகள் எதிர்ப்பதை அரசு தடைசெய்திருக்கிறது. ராம ராஜ்ஜியம் என்பது நேர்மையான, தூய்மையான ஆட்சி, இதனை விரும்பு கின்றவர்கள் அனைவரும் நிச்சயமாக ஆதரிப்பார்கள், இதனை ஆதரிக்கும் வகையில் மிகப் பெரிய அளவில் மக்கள் யாத்திரையில் பங்கேற்க வேண்டும் என்றும் எச். ராஜா கூறியுள்ளார்.
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.