அம்பேத்கர் வழியில் அரசுநடக்கிறது. நாங்கள் ஏழைகளுக்காக உழைக்கிறோம் என்று தில்லியில் நிகழ்ச்சி யொன்றில் கலந்துகொண்ட பிரதமர் மோடி கூறினார்.
எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமைச் சட்டத்தின் பயன்பாடு தொடர்பான வழக்கு ஒன்றை அண்மையில்விசாரித்த உச்சநீதிமன்றம், எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் உடனடியாக கிரிமினல் வழக்குகள் பதிவுசெய்யவும், கைது நடவடிக்கை மேற்கொள்ளவும் தடைவிதித்து கடந்த மாதம் 20-ஆம் தேதி தீர்ப்பளித்தது.
இந்ததீர்ப்பை எதிர்த்து வடமாநிலங்களில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் 11 பேர் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்நிலையில், மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்தே தலித் விரோத போக்கை கையாண்டு வருவதாகவும், தலித் விரோதப் போக்கு பாஜகவின் ரத்தத்தில் கலந்தது என்றும் காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
இதையடுத்து இன்று தில்லியில் நடந்த நிகழ்ச்சிஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி நாங்கள் அம்பேத்கர் பாதையில் பயணிக்கிறோம். அந்தவகையில் ஏழைகளுக்காக இந்த அரசு பணியாற்றுகிறது.
மேலும் முன்னாள் வாஜ்பாய் தலைமையிலான தேசியஜனநாயகக் கூட்டணி அரசாங்கமே அம்பேத்கரின் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அடையாளம்காண ஆரம்பித்தது, இந்தியாவின் அரசியலமைப் சட்டத்தை உருவாக்கிய அவருக்கு மரியாதை செலுத்துவதில் பெருமைகொள்கிறோம்.
எங்களை போல வேறு எந்த அரசும் அம்பேத்கரை இந்தளவிற்கு கெளரவிக்கவில்லை. அம்பேத்கரின் கொள்கைகளில் சமாதானம், ஒற்றுமை ஆகியவை மிகமுக்கியமானது என்று அவர் பேசினார்.
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.