தமிழகத்திற்கு வரவேண்டிய நல்ல பலதிட்டங்களை தடுப்பதற்கு என்றே தமிழ் உணர்வு என்ற போர்வையில் ஒருகூட்டம் செயல்பட்டு வருகிறது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மதுரையில் நிருபர்களிடம் பேசுகையில் குறிபிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது:
துரோகத்தை மறைக்கவே பிரதமருக்கு எதிராக தமிழகரசியல் கட்சியினர் போராட்டம் நடத்திவருகின்றனர். சமீபத்திய போராட்டம் கண்டிக்கத் தக்கது. பொய்யைசொல்லி திமுக ஆட்சிசெய்து வந்தது. தமிழர்களின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தவர்கள். சாதி, மதரீதியாக ஆட்சிக்கு வந்தவர்கள். இப்போதும் பிரித்தாளும் சூழ்ச்சி கொண்டு மீண்டும் ஆட்சிக்குவர துடிக்கின்றனர்.
தமிழக மக்களை நிம்மதியாக வாழவிடுங்கள். யார்கெட்டாலும் ஆட்சிக்கு வரவேண்டும் என சில அரசியல் கட்சிகள் துடிக்கின்றன. ஆனால் நாங்கள் நாடுநல்லா இருக்கனும் என நினைக்கிறோம்.தமிழ் உணர்வுகள் இருப்பதாக சொல்லிக் கொண்டு சிலர் பேசும்வார்த்தைகள், தமிழனை அவமானப் படுத்துவதாக உள்ளது. ஐ.பி.எல்., கிரிக்கெட் பார்க்கவந்த பெண்களை சிலர் கொச்சையாக பேசி இருக்கின்றனர். எனது சகோதரியை, எனது தாயை இழிவாக பேசுவதற்கு யார் அதிகாரம்கொடுத்தது? தமிழ் உணர்வு என்ற போர்வையில் சிலர் மக்களை முட்டாளாக்கி வருகின்றனர்.
காவிரியில் நமது உரிமைகள் நிலை நாட்டப்படவேண்டும். நிரந்தர தீர்வுகிடைக்கும் வகையில் வர வேண்டும். பிரதமர் மோடி புதிதாக திட்டமிடும் கோதாவரியில் இருந்து வரும்நீரை தாமிரபரணி வரை கொண்டு செல்ல வேண்டும். தமிழகம் உள்ளிட்ட நாடுமுழுவதும் நதிகள் இணைக்கப்பட வேண்டும். இதற்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். 3 ஆயிரம் டி.எம்.சி., தண்ணீர் கடலில் கலக்கிறதே யாராவது இதனைபெற 50 ஆண்டுகள் முயற்சி செய்தார்களா ? தமிழ் உணர்வு என மக்களை ஏமாற்றும் கட்சிகள் தமிழகத்தில் செயல்படுகிறது.
தமிழர்கள் மத்தியில் பிளவு ஏற்படுத்த பலர் முயற்சிசெய்கின்றனர். தமிழ் சமுதாயத்தை பிரிக்கும் சூழ்ச்சியை முறியடிக்க அனைவரும் ஒன்றுபடவேண்டும். மோடிக்கு எதிரான போராட்டம் நடத்துவதில் கிறிஸ்தவர்கள் பலர் இருக்கின்றனர் என்று சொல்லமுடியாது. தமிழ் நாட்டுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வரகூடாது என ஒரு கூட்டம் செயல்படுகிறது.
தமிழக அரசு வேடிக்கைபார்த்து கொண்டிருக்கிறது. பயங்கரவாதிகள் பல உருவங்களாக வளர்ந்துவருகின்றனர். பலர் பல அமைப்புகளில் பயங்கரவாத அதாவது தேசவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனை பயிற்சிகளமாக மாற்றி வருகின்றனர். 28 ஆயிரம்கோடி செலவில் துறைமுகம் கட்டுவதற்கு எதிர்ப்புதெரிவிக்க யார் அவர்கள் ? எல்லோரும் ஆதரவுகொடுத்து தற்போது வேண்டாம் என கூறுவதற்கு காரணம் என்ன ? இவ்வாறு கூறினார்.
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ... |
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.