'இதுவரை இருந்த மத்திய அரசு, அம்பேத்கரை கண்டு கொள்ளவில்லை' என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் வடசேரிபகுதியில் மேம்பாலம் அமைப்பது தொடர்பாக இன்று ஆய்வுமேற்கொண்டார். பின்னர், இறச்சகுளத்தை அடுத்த அம்பளம்துருத்தியில் பட்டியலின மக்களைச் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டுக் கொண்டு மனுக்களைப் பெற்றுக்கொண்டார். அவர் மக்கள் மத்தியில் பேசுகையில், ''மனிதர்களில் யாரும் தாழ்ந்த வரும் இல்லை, யாரும் உயர்ந்தவரும் இல்லை; அனைவரும்சமம் என்ற மாமனிதர், அம்பேத்கர். அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்காக அனைத்து தலைவர்களும் தேர்வு செய்த ஒரே தலைவர் அம்பேத்கர்தான். இதுவரை இருந்த மத்திய அரசு, அம்பேத்கரை கண்டுகொள்ளவில்லை.
மத்தியில் மோடி தலைமையிலான அரசு அமைந்த பிறகு, அம்பேத்கர் பிறந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றி யிருக்கிறார். லண்டனில் அம்பேத்கர் பயின்ற கல்விநிலையத்தில் பட்டியலின மாணவர்களைப் படிக்கவைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். பட்டியலின மாணவர்கள் உயர் கல்வி படிப்பதற்காக, மாதம் 25,000 ரூபாய் வழங்க மோடி தலைமை யிலான அரசு நடவடிக்கை எடுத்துள்ளது'' என்றார்.
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.