`காவி, இந்துத்துவ பயங்கரவாதம் என்ற வார்த்தைகளைப் பயன் படுத்தி நாட்டை அவமதித்துவருவது காங்கிரஸ் தலைவர்கள் தான்' எனக் குற்றம் சாட்டியிருக்கிறார் பா.ஜ.க தலைவர் அமித்ஷா.
கர்நாடக மாநிலச் சட்டமன்றத்துக்கு அடுத்தமாதம் 12-ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. `இந்தத்தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும்' என்ற முனைப்பில் பாஜக தலைவர்கள், கர்நாடகாவில் முகாமிட்டுள்ளனர். தேர்தல்பிரசாரப் பணிகளில் தீவிரம் காட்டிவரும் அமித்ஷா, கர்நாடகாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இன்று பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியவர், “காவி மற்றும் இந்துத்துவா பயங்கரவாதம் ஆகிய வார்த்தைகளை, காங்கிரஸ் தலைவர்கள்தான் பேசிவந்தனர். இப்படிப் பேசியே நாட்டை அவர்கள் அவமதித்தும் வந்தார்கள். அக்கட்சியின் தலைவர் ராகுல் `பயங்கர வாதத்துக்கு எந்தமதமும் கிடையாது' என்றார். பின்னர், `நாங்கள் அதுபோன்ற வார்த்தைகளைப் பயன் படுத்தவே இல்லை' எனக் கூறிவிட்டனர்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா உட்பட பலகாங்கிரஸ் தலைவர்கள் இந்த வார்த்தையை பயன் படுத்தியதற்கான பதிவுகள் உள்ளன. மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, `நாடாளுமன்றத்தில் இரு எம்.பி-க்களை மட்டுமே பா.ஜ.க வைத்துள்ளது' எனப் பேசியிருந்தார். இன்று நாடாளு மன்றத்தில் பெரும்பான்மையாக அமர்ந்திருக்கிறோம். அதேபோல், நாடுமுழுவதும் 1,600-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-களை வைத்திருக்கிறோம். 20 மாநிலங்களில் எங்கள் ஆட்சிதான் நடந்துவருகிறது’’ என்றார் .
பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ... |
வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ... |
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.