நாடாளுமன்றத்தின் செயல் பாடுகளை நீதிமன்றம், ஆய்வுக்கு உட்படுத்த முடியாது என்று மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்யக்கோரி காங்கிரஸ் உள்ளிட்ட 7 கட்சிகள், மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய்யா நாயுடுவிடம் நோட்டீஸ் அளித்திருந்தன.
இதனை வெங்கைய்யா நாயுடு நிராகரித்ததையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல், இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இதற்கு பதில்அளிக்கும் வகையில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கட்டுரை வெளியிட்டுள்ள அருண்ஜெட்லி, நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளை நீதிமன்றம் ஆய்வு செய்யமுடியாது என அதில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் தன்னளவில் உச்சபட்ச அமைப்பு எனக்குறிப்பிட்டுள்ள அருண் ஜெட்லி, இதில் கேள்விக்கே இடமில்லை என கூறியுள்ளார்.
இதேபோல், மாநிலங்களவைத் தலைவரின் முடிவுகளையோ, மக்களவை சபாநாயகரின் முடிவுகளையோ நீதிமன்றம் கேள்விகேட்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்விஷயத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு, தற்கொலையை நோக்கிச்செல்வதைப் போல் உள்ளது என அருண் ஜெட்லி விமர்சித்துள்ளார்.
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.