சீனா உடனான இந்தியாவின் உறவுபற்றி பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் நரேந்திரமோடி இன்று அந்நாட்டுக்கு பயணிக்க உள்ளார்.
சீனா, கஜகஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகியநாடுகளை உள்ளடக்கியது ஷங்காய் கூட்டுறவு அமைப்பு. இந்த அமைப்பின் மாநாடு வரும் ஜூன் மாதம் ஷங்காய் நகரில் நடை பெறுகிறது.
இதற்கு முன் நடை பெறும் ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் வெளியுறவுத் துறை மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஏற்கெனவே ஷங்காய் நகருக்குச் சென்றுள்ளார். அவர் டோக்லாம் விவகாரம் உட்பட இந்தியா – சீனா இடையிலான பலபிரச்னைகள் பற்றி விரிவாக ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக, கடந்த 13ஆம் தேதி இந்தியபாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் சீனாசென்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகளை சந்தித்துப்பேசினார்.
இந்நிலையில், இந்தியா – சீனா ஆகிய நாடுகளின் உயர்மட்ட தலைவர்கள் சீனாவில் உள்ள வுஹான் நகரில் சந்திக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. ஏப்ரல் 27, 28 ஆகிய நாட்களில் நடைபெறும் இந்த உயர் மட்டத் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திரமோடி இன்று சீனா புறப்படுகிறார்.
இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் மோடி சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட அந்நாட்டு உயர்அதிகாரிகளுடன் இந்தியா – சீனா இடையிலான முக்கிய விவகாரங்கள் பற்றியும் இதரசர்வதேச பிரச்சனைகள் பற்றியும் ஆலோசிக்கிறார்.
பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ... |
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |
Leave a Reply
You must be logged in to post a comment.