இந்திய அரசியலில் பாகிஸ் தானை ஈடுபடுத்துவது ஏன்? என்று காங்கிரஸ் கட்சிக்கு பாஜக. தேசியத்தலைவர் அமித் ஷா கேள்வி யெழுப்பியுள்ளார்.
இது குறித்த சுட்டுரையில் அமித் ஷா பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில்,திப்பு சுல்தானின் நினைவுதினத்தையொட்டி பாகிஸ்தான் அரசு சார்பில் அஞ்சலி செலுத்தப் பட்டிருப்பது. முகமது அலி ஜின்னாவை முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் புகழ்ந்துபேசியிருப்பது தொடர்பான செய்திகள் குறித்த காட்சிகளை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
காங்கிரசுக்கும், பாகிஸ்தானுக்கும் சிறப்பான நுண்ணுர்வு இருக்கிறது.
திப்புசுல்தானின் பிறந்த தினத்தை காங்கிரஸ் கட்சி முன்பு விழாவாக கொண்டாடியது. அதேபோல், பாகிஸ்தான் அரசு திப்பு சுல்தானின் நினைவுதினத்தை அனுசரித்தது. மணிசங்கர் அய்யர், ஜின்னாவை புகழ்ந்துபேசுகிறார்.
குஜராத் தேர்தலானாலும் சரி, கர்நாடகத் தேர்தலானாலும் சரி, பாகிஸ்தானை ஏன் காங்கிரஸ் ஈடுபடுத்துகிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
குஜராத் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றபோது, அந்த தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்கு பாகிஸ்தான் மூத்த அரசு அதிகாரிகளுடன் காங்கிரஸ் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதேபோல், தற்போது ஜின்னா, திப்பு சுல்தான் ஆகியோர் மீது இருதரப்பும் பரஸ்பரம் அன்புகாட்டுகின்றனர். இந்திய அரசியலில் வெளிநாடுகளை ஈடுபடுத்த வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சிக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன் என்று அந்தப்பதிவுகளில் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.