இன்று காவிரிப்பிரச்சினையில் மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசின் வரைவுத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல அரசு உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ம் தேதி அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும், மாநிலங்களுக்கான நதிநீர் பங்கீடு 6A திட்டத்தின் படியே தயாரிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆக பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறுக்கப்பட்ட காவிரி, திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மறுக்கப்பட்ட காவிரி இன்று பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் தமிழக காவிரி உரிமை மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது.
உச்சநீதிமன்றம் மத்திய அரசின் வரைவு தீர்மானத்தை ஏற்றுக்கொள்கின்ற அதே நேரத்தில் இதற்கு எதிராக வழக்கு தொடர்ந்த கர்நாடக காங்கிரசின் கருத்துகளையும், கேரள கம்யூனிஸ்டுகளை நிராகரிக்கிறோம் எனப் பதிவிட்டிருக்கிறார்கள். ஆக இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் தமிழகத்திற்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சி செயல்பட்டிருக்கிறது. காங்கிரசும், கம்யூனிஸ்டும் தமிழகத்திற்கு எதிராக செயல்பட்டிருக்கிறது.
நாங்கள் தெளிவாக சொல்லி வந்தோம் நிதானமாக முடிவெடுத்தாலும் நிரந்தர தீர்வை நோக்கித்தான் பாரதிய ஜனதா கட்சி அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று! ஆனால் பண்ணெடுங்காலமாக தாங்கள் கையில் ஆட்சி அதிகாரம் இருந்தும் தீர்வைத் தராமல் ஆண்டாண்டு காலம் தமாமதப்படுத்தியவர்கள், சில வாரங்கள் நியாயமான காரணங்களைச் சொல்லி பாரதிய ஜனதா கட்சி அவகாசம் கேட்ட போதும் தாங்கள் தவறை மறைக்க பாரதிய ஜனதா கட்சிற்கு எதிராக போரட்டங்களை நடத்தினார்கள்,
கருப்புக்கொடி காட்டினார்கள், வருங்காலத்தில் இரண்டரை இலட்டம் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு அமைக்கப்பட்ட இராணுவதளவாடக் கண்காட்சியை துவக்கி வைக்க வந்த பாரத பிரதமரை அவமானப்படுத்தினார்கள். ஆக அந்தக்கட்சிகள் இப்படி நடந்து கொண்டதற்கு தலைகுனிய வேண்டும்.
தமிழக மக்கள் அனைவரும் மத்திய அரசின் நல்லெண்ணத்தைப் புரிந்துக் கொள்ள வேண்டும். தமிழக விவசாயிகளும் மக்களும் இந்த காங்கிரஸ் திமுக போல் அல்லாமல் தமிழக மக்களோடு நாங்கள் உள்ளோம் என்பதை புரிந்து கொண்டு பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக இருப்பார்கள் என்பது உறுதி. இதே போல் மத்திய அரசிற்கு எதிரான பிரச்சாரங்கள் ஒவ்வொன்றாக மக்களின் ஆதரவோடு தவிடு பொடியாக போகிறது என்பது உறுதி.
என்றும் மக்கள்;; பணியில்
(Dr. தமிழிசை சௌந்தரராஜன்)
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ... |
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
Leave a Reply
You must be logged in to post a comment.