பா.ஜனதாவில் இணைய மேலும்பலர் வரிசையில் உள்ளதாக மும்பையில் நடந்த விழாவில், முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சிசார்பில் மராட்டிய சட்டமேலவைக்கு தேர்வு செய்யப்பட்டவர் நிரஞ்சன் தவ்காரே. இவர் மறைந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் வசந்த்தவ்காரேயின் மகன் ஆவார். இவரது பதவிகாலம் முடிய ஒரு மாதம் இருந்தநிலையில், திடீரென நேற்று முன்தினம் அவர் தனதுபதவியை ராஜினாமா செய்தார்.
இதைத்தொடர்ந்து மும்பையில் நேற்று நடந்த விழாவில் நிரஞ்சன் தவ்காரே, முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தார். பின்னர் முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசியதாவது:-
வசந்த் தவ்காரே எல்லோருக்கும் தெரிந்தவர், பலஆண்டுகளாக அரசியலில் இருந்தவர். அவரதுமகன் நிரஞ்சன் தவ்காரே கடந்த பலநாட்களாக எங்களுடன் தொடர்பில் இருந்தார். அவர் தேசியகட்சியில் இணைய விரும்பினார். அவர் எங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என நாங்களும் விரும்பினோம். 30 ஆண்டுகளுக்கு முன் பா.ஜனதா சிறியகட்சியாக இருந்தது. மெல்ல, மெல்ல வளர்ந்து தற்போது பா.ஜனதா மிகப் பெரிய கட்சியாகி உள்ளது.
பா.ஜனதாவில் இணைய மேலும் பலர் வரிசையில் உள்ளனர். அவர்களின் பெயர் தேவைப்படும்போது வெளியிடப்படும்.
இவ்வாறு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசினார்.
பா.ஜனதாவில் இணைந்தபிறகு பேசிய நிரஞ்சன் தவ்காரே கூறுகையில், ‘சரத்பவார் மிக ப்பெரிய தலைவர் என்றாலும் பிரதமர் மோடியின் வளர்ச்சி திட்டங்களில் நம்பிக்கை ஏற்பட்டு பா.ஜனதாவில் இணைந்தேன்’ என்றார்.
இந்தவிழாவில் பா.ஜனதா மாநில தலைவர் ராவ்சாகிப் தன்வே உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.