பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் திட்டமிட்ட திடுக்கிடும் தகவலை போலீசார் வெளியிட் டுள்ளனர். இத்தகவல் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக மத்திய மந்திரி அருண் ஜெட்லி அரசியல் கட்சிகள் மீது குற்றம் சாட்டியுள்ளார். அவர் தனது வலைதள பக்கத்தில் கூறிதாவது:-
கடந்த சில நாட்களாக மாவோயிஸ்டு பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்து இருப்பதை உணரமுடிகிறது. அந்த அமைப்பின் ஆதிக்கம் இல்லாத பகுதிகளிலும் பயங்கரவாத சம்பவங்கள் நடந்துவருகின்றன. இதுதேசத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.
பா.ஜ.க தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி அரசுக்கு எதிரான ஆயுதமாக மாவோயிஸ்டு பயங்கர வாதிகளை சில அரசியல்கட்சிகள் பயன் படுத்தி வருகின்றன. இந்த நடவடிக்கைகள் சரியான தல்ல.
ஆட்கொல்லி புலியின் மீது சவாரிசெய்வது ஆபத்தாகத்தான் முடியும் என்பதை அக்கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும். மாவோயிஸ்டு பயங்கரவாதத்தை வேரறுப்பது குறித்து அனைத்து தரப்பினரும் சிந்திக்கவேண்டும். ஏனெனில் இது மிகத்தீவிரமான விஷயம்.
இவ்வாறு அருண்ஜெட்லி குறிப்பிட்டுள்ளார்
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.